பாதாள குழுவுடன் உறவு: கட்சி உறுப்பினரை நீக்கியது சஜித் அணி
லஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்புரிமையை ஐக்கிய மக்கள் சக்தி உடனடியாக ரத்து செய்துள்ளது.
கட்சியின் ஹொரண தொகுதி அமைப்பாளர் உட்பட அவர் வகித்த அனைத்து உத்தியோகபூர்வ பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.
“2023 ஆம் ஆண்டளவில் அபேசிங்க கட்சியின் உறுப்பினராகவோ அல்லது அமைப்பாளராகவோ செயற்படவில்லை.” என்று SJP செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அக்காலப்பகுதியில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் அவர் எந்தவொரு உத்தியோகபூர்வ பதவிகளையும் வகிக்கவில்லை என்றும் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஊழல் அல்லது ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்டம் நடை முறைப்படுத்தப்படு வதையோ அல்லது நீதித்துறை செயல்முறைகள் முன்னெடுக்கப்படுவதையோ ஐக்கிய மக்கள் சக்தி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எதிர்க்காது என்பதை பொதுச் செயலாளர் தனது அறிக்கையில் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.




