‘அணுசக்தி’- அமெரிக்கா, இஸ்ரேல் குற்றச்சாட்டை நிராகரித்தது ஈரான்
ஈரானின் அமைதியான அணுசக்தித் திட்டம் குறித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை ஈரான் முற்றாக நிராகரித்துள்ளது.
வளைகுடா நாடுகள், ஈரானை ஒரு அச்சுறுத்தலாகப் பார்க்காமல், மத்திய கிழக்கை அணு ஆயுதங்களற்ற மண்டலமாக மாற்ற ஒத்துழைக்க வேண்டும் எனவும் ஈரான் அழைப்பு விடுத்துள்ளது.
பிராந்தியத்தின் பாதுகாப்பு என்பது வெளிநாடுகளின் தலையீடு இன்றி, உள்ளூர் நாடுகளின் கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியமாகும் என்பதை ஈரான் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.
மேலும், தனது தற்காப்பு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் திறன்களை ஒரு அச்சுறுத்தலாகச் சித்தரிக்கும் முயற்சிகளை ஈரான் வன்மையாகக் கண்டித்துள்ளது.




