ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஈரானால் ஆபத்து: உளவுப் பிரிவு எச்சரிக்கை

பெரிய திட்டமிடல்கள் இன்றி, மிகக் குறைந்த ஆயுதங்களைக் கொண்டு திடீர் தாக்குதல்களை அவர்கள் நடத்துவதால், இவர்களைக் கண்காணிப்பது அல்-கொய்தா அல்லது ஐஎஸ்ஐஎஸ் (ISIL) அமைப்புகளைக் கண்காணிப்பதை விட மிகவும் கடினமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும்சூழ்நிலையில், ஈரான் ஆதரவு பெற்ற குகுழுவொன்று, ஆஸ்திரேலிய மண்ணில் தீவைப்பு, பொதுச்சொத்துக்களைச் சேதப்படுத்துதல் மற்றும் படுகொலைகளைக் கூட நிகழ்த்தக்கூடும் என்று அந்நாட்டு உளவுத்துறை அமைப்பான ASIO-வின் தலைமை இயக்குநர் மைக் பர்கெஸ் (Mike Burgess) எச்சரித்துள்ளார்.

தனது வருடாந்திர அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புச் சூழல் சிதைவடைந்து வருவதாகவும் உளவுத்துறை பிரதான சுட்டிக்காட்டியுள்ளார்.

சிட்னி Bondi Beach பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் பெர்த்தில் நடந்த Invasion Day பேரணியில் முறியடிக்கப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலுக்குப் பிறகு வெளியிடப்படும் முதல் அறிக்கை இதுவாகும்.

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் மற்றும் வல்லரசு நாடுகளுக்கு இடையிலான போட்டி காரணமாக, ஆஸ்திரேலியாவில் உளவு வேலைகளும் வெளிநாட்டுத் தலையீடுகளும் “தீவிர நிலையை” எட்டியுள்ளதாக Mike Burgess கூறியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான ஈரானின் மோதல் தணிந்துள்ள போதிலும், ஆஸ்திரேலியாவைத் தங்களுக்கு எதிரான ஒரு இலக்காகவே ஈரான் இன்னும் பார்க்கிறது.

“ஐரோப்பாவில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் ஈரானிய ஆதரவுக் குழுக்கள், ஆஸ்திரேலியாவிலும் தங்கள் நெட்வொர்க்கை விரிவுபடுத்தி, படுகொலைகள் மற்றும் தீவைப்பு போன்ற வன்முறைகளைத் தூண்டக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்மையாகவே உள்ளன,” என்று பர்கெஸ் எச்சரித்தார்.

மேலும், தற்போது தனிநபர்கள் குழுக்களாக இணையாமல், தனித்தனியாக இணையம் (Online) வழியாகவே தீவிரவாதப் பாதைக்கு ஈர்க்கப்படுகிறார்கள்.

பெரிய திட்டமிடல்கள் இன்றி, மிகக் குறைந்த ஆயுதங்களைக் கொண்டு திடீர் தாக்குதல்களை அவர்கள் நடத்துவதால், இவர்களைக் கண்காணிப்பது அல்-கொய்தா அல்லது ஐஎஸ்ஐஎஸ் (ISIL) அமைப்புகளைக் கண்காணிப்பதை விட மிகவும் கடினமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி