ஈரான் மீதான போருக்கு அமெரிக்காவுக்கு 29 பில்லியன் டொலர் செலவு
ஈரான் தொடர்பான அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்காக இதுவரை சுமார் 29 பில்லியன் அமெரிக்க டொலர் செலவாகியுள்ளதாக பென்டகன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க பாதுகாப்புத்துறையின் கணக்கியல் பொறுப்புகளை மேற்கொண்டு வரும் ஜூல்ஸ் ஹர்ஸ்ட், இந்தத் தகவலை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வெளியிட்டார். இந்த மொத்தச் செலவில் இராணுவ உபகரணங்களை பழுதுபார்த்தல், சேதமடைந்த சாதனங்களை மாற்றுதல் மற்றும் பல்வேறு செயல்பாட்டு செலவுகள் அடங்குவதாக அவர் விளக்கமளித்தார். மேலும், கடந்த மாத இறுதியில் வெளியிடப்பட்ட மதிப்பீட்டை விட இந்தச் செலவு […]













