தெற்கு லெபனானில் புதிய இடப்பெயர்வு உத்தரவு
இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர் நிறுத்தம் அமுலில் உள்ள நிலையிலும், தெற்கு லெபனானில் இஸ்ரேலிய இராணுவம் தனது நடவடிக்கைகளை தொடர்ந்து விரிவுபடுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, தெற்கு லெபனானில் உள்ள நான்கு கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு இஸ்ரேல் புதிய கட்டாய இடப்பெயர்வு உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த பகுதிகளில் விரைவில் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என எச்சரித்துள்ள இஸ்ரேலிய இராணுவம், குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு நகர வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
அர்ஸூன், தயிர் தெப்பா, பஸூரியே மற்றும் அல்-ஹௌஷ் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதிலும், தெற்கு லெபனானில் தொடர்ந்து இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் இடப்பெயர்வு உத்தரவுகள், அப்பகுதியில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளன.
இதற்கிடையில், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான நிலைமை குறித்து சர்வதேச அமைப்புகள் கவலை வெளியிட்டு வருகின்றன.




