அமெரிக்கா – ஈரான் உறவை காப்பாற்ற முயலும் பாகிஸ்தான்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து ஏற்படுத்தியதாகக் கூறப்படும் பலவீனமான போர் நிறுத்தம் தற்போது ஆபத்தான நிலையை நோக்கி நகர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, சாத்தியமான அமெரிக்கத் தாக்குதல்களிலிருந்து ஈரானிய இராணுவ விமானங்களுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு வழங்கியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை இஸ்லாமாபாத் நிராகரித்துள்ளது.
ஒரு மாத கால போர் நிறுத்தம் தற்போது “மிகப்பெரிய உயிர்வழி ஆதரவில்” மட்டுமே நீடித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரான் அண்மையில் முன்வைத்த சமாதான முன்மொழிவை “முழுமையாகப் படித்துக்கூட முடிக்காத ஒரு குப்பை” என ட்ரம்ப் கடுமையாக விமர்சித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ட்ரம்ப் நிர்வாகத்தின் சில அதிகாரிகள், “உண்மையான நிலையை பிரதிபலிப்பதை விட, ஈரானின் நிலைப்பாட்டை சாதகமாக காட்டும் வகையில் பாகிஸ்தான் அமெரிக்காவுடன் தகவல்களைப் பகிர்ந்து வருகிறது” என்று நம்புவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், ட்ரம்பின் அதிருப்தி மற்றும் எச்சரிக்கைகளை பாகிஸ்தான் போதுமான தீவிரத்துடன் தெஹ்ரானிடம் எடுத்துரைக்கிறதா என்ற சந்தேகமும் வொஷிங்டன் வட்டாரங்களில் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்கா – ஈரான் உறவில் மீண்டும் பதற்றம் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதால், பிராந்திய அரசியல் சூழல் மேலும் சிக்கலடைந்து வருகிறது.





