செய்தி தமிழ்நாடு

தமிழ்நாட்டில் போதையைஒழிக்க புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி கோரிக்கை

தமிழ்நாட்டில் மது மற்றும் போதையை முற்றிலுமாக ஒழிக்க போர்க்கால அடிப்படையில் புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஜோசப் விஜய்க்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சமூக வலைதள பதிவிலேயே அவர் இதனை வலியுறுயுள்ளார்.

சேலம் மாவட்டம் சீல நாயக்கன்பட்டி ,காட்டுவளவு என்ற பகுதியில் மது போதையில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரு மாணவர்கள் உள்ளிட்ட மூவர், சக மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டு படுகொலை செய்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்

அதுமட்டுமின்றி, கொலை செய்யும் காட்சிகளை காணொளியாக பதிவு செய்து கொண்டாடியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் மதுவும், பிற போதைப் பொருள்களும் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துவதாக கூறிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நிலைமை மேலும் மோசமாவதைத் தடுக்க புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி