ஸ்டார்மர் மீது தொடரும் விமர்சனம் – தொழிற்கட்சி எம்.பி கடும் குற்றச்சாட்டு
பிரதமர் Starmer பதவியில் இருந்து விலகாமல் தொடர்ந்தும் பணியை மேற்கொள்வது, கட்சிக்குள் மேலும் பெரிய அரசியல் சவாலை உருவாக்கியுள்ளதென தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பவுலெட் ஹாமில்டன் (Paulette Hamilton) தெரிவித்துள்ளார்.
ஸ்டார்மரின் கட்சி சகாக்கள் ஆரம்பத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்கத் தயாராக இருந்ததாகவும், ஆனால் அந்த நம்பிக்கையை அவர் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றும் ஹாமில்டன் கூறியுள்ளார்.
மேலும், தற்போதைய அரசியல் நிலைமை தொழிற் கட்சிக்கு மட்டுமின்றி, நாட்டின் சர்வதேச மதிப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பவுலெட் ஹாமில்டன் (Paulette Hamilton) எச்சரித்தார்.
“இப்போது ஸ்டார்மருக்கு நிலைமை அவ்வளவு நன்றாக இல்லை. இது உலக அரங்கில் எங்களைப் பிரகாசமாக காட்டாது,” என்று அவர் கூறினார்.
அதே நேரத்தில், பிரதமரை “செவிசாய்க்காத பிடிவாதக்காரர்” என்று வர்ணித்த ஹாமில்டன், கட்சிக்குள் உள்ள அதிருப்தி மேலும் அதிகரித்து வருவதை வெளிப்படுத்தினார்.
தொழிலாளர் கட்சிக்குள் தொடரும் இந்த உள்நாட்டு விமர்சனங்கள், Keir Starmer தலைமையின் எதிர்காலம் குறித்து அரசியல் வட்டாரங்களில் மேலும் கேள்விகளை எழுப்பியுள்ளது.




