உலகம் செய்தி

ஈரான் மீதான போருக்கு அமெரிக்காவுக்கு 29 பில்லியன் டொலர் செலவு

ஈரான் தொடர்பான அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்காக இதுவரை சுமார் 29 பில்லியன் அமெரிக்க டொலர் செலவாகியுள்ளதாக பென்டகன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பாதுகாப்புத்துறையின் கணக்கியல் பொறுப்புகளை மேற்கொண்டு வரும் ஜூல்ஸ் ஹர்ஸ்ட், இந்தத் தகவலை  அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வெளியிட்டார்.

இந்த மொத்தச் செலவில் இராணுவ உபகரணங்களை பழுதுபார்த்தல், சேதமடைந்த சாதனங்களை மாற்றுதல் மற்றும் பல்வேறு  செயல்பாட்டு செலவுகள் அடங்குவதாக அவர் விளக்கமளித்தார்.

மேலும், கடந்த மாத இறுதியில் வெளியிடப்பட்ட மதிப்பீட்டை விட இந்தச் செலவு தற்போது 04 பில்லியன் டொலர்  அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் தொடர்பான இராணுவ நடவடிக்கைகள் நீடித்து வரும் நிலையில், அமெரிக்காவின் பாதுகாப்புச் செலவுகள்  தொடர்ந்து உயர்ந்து வருவது குறித்து அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் கவலைகள் எழுந்துள்ளன.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி