இலங்கை

இலங்கையில் உச்சபட்ச வெப்பநிலை திருகோணமலையில் பதிவு

  • July 25, 2026
  • 0 Comments

நாட்டில் இன்று உச்சபட்சமாக 39.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை திருகோணமலை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இரண்டாவது அதிகபட்ச வெப்பநிலை பொலன்னறுவை மாவட்டத்தில் 38.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. அதேபோல் வவுனியாவில்  – 37.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும்,  மொனராகலையில் 37.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், முல்லைத்தீவில்   37.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.  

இலங்கை

இலங்கையில் உச்சபட்ச வெப்பநிலை பதிவு

  • June 21, 2026
  • 0 Comments

இலங்கையில் இன்று அதிகபட்சமாக 37.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. பொன்னறுவை மாவட்டத்திலேயே இந்த உச்சபட்ச வெப்பநலை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வுத் துறை அறிவித்துள்ளது. இரண்டாவது அதிகபட்ச வெப்பநிலை முல்லைத்தீவுப் பகுதியில் பதிவாகியுள்ளது. அங்கு 35 .8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

ஐரோப்பா

லண்டனில் உச்சபட்ச வெப்பநிலை பதிவு!

  • May 1, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் சில பகுதிகளில், குறிப்பாக லண்டன் மற்றும் ஈஸ்ட் ஆங்லியாவில் ( East Anglia) வெப்பநிலை 27°C வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டின் மிகவும் வெப்பமான நாளாகவும், ஹவாயில் உள்ள ஹோனோலுலுவை (Honolulu) விட அதிக வெப்பம் கொண்டதாக அமையக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கிலிருந்து வரும் ஈரப்பதமான காற்று, கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளுக்கு சூரிய ஒளியைக் கொண்டு வருவதால் இந்த வெப்பமான சூழல் நிலவுவதாக வானிலை ஆய்வாளர் சைமன் பார்ட்ரிட்ஜ் ( […]