லண்டனில் உச்சபட்ச வெப்பநிலை பதிவு!
பிரித்தானியாவின் சில பகுதிகளில், குறிப்பாக லண்டன் மற்றும் ஈஸ்ட் ஆங்லியாவில் ( East Anglia) வெப்பநிலை 27°C வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இது இந்த ஆண்டின் மிகவும் வெப்பமான நாளாகவும், ஹவாயில் உள்ள ஹோனோலுலுவை (Honolulu) விட அதிக வெப்பம் கொண்டதாக அமையக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கிலிருந்து வரும் ஈரப்பதமான காற்று, கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளுக்கு சூரிய ஒளியைக் கொண்டு வருவதால் இந்த வெப்பமான சூழல் நிலவுவதாக வானிலை ஆய்வாளர் சைமன் பார்ட்ரிட்ஜ் ( Simon Partridge) குறிப்பிட்டார்.
இந்த வெப்பமான சூழல் இருந்தபோதிலும், ஸ்காட்லாந்து (Scotland), பென்னின்ஸ் (Pennines’) மற்றும் மிட்லாண்ட்ஸ் (Midlands) உள்ளிட்ட பகுதிகளில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த வெப்பமான சூழல் குறுகிய காலமே நீடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.





