ஐரோப்பா

அணுசக்தி விரிவாக்க முயற்சியில் பிரான்ஸுடன் கூட்டிணையும் பின்லாந்து

  • September 14, 2026
  • 0 Comments

அணுசக்தித் தடுப்புத் திறனின் (nuclear deterrent) வரம்பை விரிவுபடுத்தும் முயற்சியில் பிரான்ஸுடன் பின்லாந்தும் கூட்டிணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பாவிற்கான அமெரிக்காவின் பாதுகாப்பு உறுதிப்பாடு மற்றும் உக்ரைன் போரினால் ஏற்படும் பாதுகாப்பு விளைவுகள் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்ததை தொடர்ந்து அணுசக்தித் தடுப்பு முயற்சி’ (Forward Nuclear Deterrence Initiative) குறித்த அறிவிப்பை பிரான்ஸ் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. இந்நிலையில் தற்போது பிரான்ஸ் அரசுடன் பின்லாந்தும் கூட்டிணைந்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பின்லாந்து ஜனாதிபதி, “இந்த […]

ஐரோப்பா

போரினால் பின்லாந்தை ஊடுருவும் விமானங்கள் – உளவுத்துறை எச்சரிக்கை

  • August 21, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் விமானம் ஒன்று தங்கள் வான்வெளியை ஊடுருவியிருக்கலாம் என பின்லாந்து அரசாங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது. பின்லாந்தின் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. வான்வெளி மீறல் எனச் சந்தேகிக்கப்படும் ஒவ்வொரு செயலும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது,” என்று பாதுகாப்பு அமைச்சர் ஆண்டி ஹக்கனென் Antti Hakkanen தெரிவித்துள்ளார். ரஷ்யாவுடன் 1,340 கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் பின்லாந்தில், இதுபோன்ற தொடர்ச்சியான சம்பவங்கள் நடந்துள்ளன. மே மற்றும் ஜூன் மாதங்களில் இரண்டு ரஷ்ய இராணுவ விமானங்கள் பின்லாந்து […]

ஐரோப்பா

பின்லாந்தை ஸ்வீடனுடன் இணைக்கும் புதிய ரயில் சேவை

  • August 10, 2026
  • 0 Comments

பின்லாந்தை ஸ்வீடனுடன் இணைக்கும் ஒரு புதிய பயணிகள் ரயில் சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 1990-களுக்குப் பிறகு முதன்முறையாக வடக்கு பின்லாந்திலிருந்து தெற்கு ஐரோப்பா வரை நீளும் ஒரு ரயில் பாதை உருவாக்கப்பட்டுள்ளது. வடக்கு பின்லாந்தில் உள்ள  Oulu  ரயில் நிலையத்தில் குறித்த ரயில் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் இந்த ரயில் தனது சேவையை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

பின்லாந்தில் முதல் முறையாக ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பதிவு

  • July 31, 2026
  • 0 Comments

பின்லாந்தில் முதல் முறையாக ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் இனங்காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பன்றிகளிடம் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உணவு சுகாதார அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். மனிதர்களுக்கு பாதிப்பில்லாத இந்த நோய், பன்றிகள் மற்றும் காட்டுப்பன்றிகளிடம் கிட்டத்தட்ட 100 சதவிகித இறப்பு விகிதத்தை கொண்டுள்ளன. விரோலாஹ்டி  (Virolahti) மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளைச் சுற்றி ஒரு தொற்று மண்டலத்தை அந்த அமைப்பு வரையறுத்துள்ளது.    

ஐரோப்பா

பின்லாந்தில் 150 ஆண்டுகால பழமையான தொலைபேசி சேவைக்கு முற்றுப்புள்ளி

  • June 30, 2026
  • 0 Comments

பின்லாந்து கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்குப் பிறகு அனலாக் (analogue) தரைவழித் தொலைபேசி அழைப்புகளுக்கு இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இணைய சேவைகள் மற்றும் குரல் அழைப்புகள் இரண்டையும் கையாளக்கூடிய ஃபைபர் ஆப்டிக் கேபிளை உலகெங்கிலும் உள்ள நாடுகள் நிறுவி வருவதால், பின்லாந்தும் புதிய  டிஜிட்டல் மாற்றத்தை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. பின்லாந்தின் நிலையான தொலைபேசி வலையமைப்பு 1880-களில் செயல்படத் தொடங்கியது. எஸ்டோனியா, நெதர்லாந்து, நோர்வே மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இணைய சேவைகள் மற்றும் குரல் அழைப்புகள் இரண்டையும் கையாளக்கூடிய […]

ஐரோப்பா

பின்லாந்தின் ஹெல்சிங்கி விமான நிலையத்தில் சேவை நிறுத்தம்!

  • May 15, 2026
  • 0 Comments

பின்லாந்தின் ஹெல்சிங்கி (Helsinki) விமான நிலையத்தில் இன்று வான்வழிப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்லாந்தின் வான்வெளியில் ட்ரோன் விமானங்கள் பறப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து பிரதமர் பெட்டேரி ஓர்போ (Petteri Orpo)  அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். பின்னர், உள்துறை அமைச்சர் மாரி ரந்தனென் (Mari Rantanen), ஆபத்து நீங்கிவிட்டதாகவும், நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாகவும் உறுதிப்படுத்தினார். இதனையடுத்து விமான சேவைகள் வழக்கம்போல் இயக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.