பின்லாந்தில் 150 ஆண்டுகால பழமையான தொலைபேசி சேவைக்கு முற்றுப்புள்ளி
பின்லாந்து கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்குப் பிறகு அனலாக் (analogue) தரைவழித் தொலைபேசி அழைப்புகளுக்கு இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இணைய சேவைகள் மற்றும் குரல் அழைப்புகள் இரண்டையும் கையாளக்கூடிய ஃபைபர் ஆப்டிக் கேபிளை உலகெங்கிலும் உள்ள நாடுகள் நிறுவி வருவதால், பின்லாந்தும் புதிய டிஜிட்டல் மாற்றத்தை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.
பின்லாந்தின் நிலையான தொலைபேசி வலையமைப்பு 1880-களில் செயல்படத் தொடங்கியது.
எஸ்டோனியா, நெதர்லாந்து, நோர்வே மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இணைய சேவைகள் மற்றும் குரல் அழைப்புகள் இரண்டையும் கையாளக்கூடிய ஃபைபர் ஆப்டிக் கேபிளை நிறுவி வருவதால் பின்லாந்தும் இந்த தொழில்நுட்பத்திற்கு மாறியுள்ளது.




