பின்லாந்தை ஸ்வீடனுடன் இணைக்கும் புதிய ரயில் சேவை
பின்லாந்தை ஸ்வீடனுடன் இணைக்கும் ஒரு புதிய பயணிகள் ரயில் சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், 1990-களுக்குப் பிறகு முதன்முறையாக வடக்கு பின்லாந்திலிருந்து தெற்கு ஐரோப்பா வரை நீளும் ஒரு ரயில் பாதை உருவாக்கப்பட்டுள்ளது.
வடக்கு பின்லாந்தில் உள்ள Oulu ரயில் நிலையத்தில் குறித்த ரயில் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.
ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் இந்த ரயில் தனது சேவையை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




