போரினால் பின்லாந்தை ஊடுருவும் விமானங்கள் – உளவுத்துறை எச்சரிக்கை
ரஷ்யாவின் விமானம் ஒன்று தங்கள் வான்வெளியை ஊடுருவியிருக்கலாம் என பின்லாந்து அரசாங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
பின்லாந்தின் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
வான்வெளி மீறல் எனச் சந்தேகிக்கப்படும் ஒவ்வொரு செயலும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது,” என்று பாதுகாப்பு அமைச்சர் ஆண்டி ஹக்கனென் Antti Hakkanen தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுடன் 1,340 கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் பின்லாந்தில், இதுபோன்ற தொடர்ச்சியான சம்பவங்கள் நடந்துள்ளன.
மே மற்றும் ஜூன் மாதங்களில் இரண்டு ரஷ்ய இராணுவ விமானங்கள் பின்லாந்து வான்வெளிக்குள் நுழைந்ததாக பின்லாந்து சந்தேகிக்கிறது, மேலும் அப்போது ரஷ்ய தூதரகப் பொறுப்பாளரை வரவழைத்தது.
இதற்கிடையே “பின்லாந்து வளைகுடாவிற்கு அருகிலுள்ள இந்தப் பகுதியில் உக்ரைன் எவ்வளவு அதிகமாகத் தாக்குதல் நடத்துகிறதோ, அந்த அளவிற்கு ஆளில்லா விமானம் பின்லாந்து வான்வெளிக்குள் அல்லது பின்லாந்து நிலப்பரப்பிற்குள் ஊடுருவும் அபாயம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது,” என்று பாதுகாப்பு உளவுத்துறையின் (FDI) தலைவர் மேஜர் ஜெனரல் பெக்கா துருனென், தெரிவித்துள்ளார்.




