ஐரோப்பா

ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவது தொடர்பான பேச்சுவார்த்தை – ஐஸ்லாந்தில் பொதுவாக்கெடுப்பு

  • August 29, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதா, இல்லையா என்பது தொடர்பில்  ஐஸ்லாந்து மக்கள் இன்று  வாக்களிக்கவுள்ளனர். வாக்களிப்பு உள்ளூர் நேரப்படி காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை  நடைபெறும். அதாவது ஐஸ்லாந்தை ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை தொடர்வதா இல்லையா என்பது தொடர்பிலேயே மக்கள் வாக்களிக்கவுள்ளனர். ஐஸ்லாந்து தனது நிதி நெருக்கடியைத் தொடர்ந்து, 2009-ல் இந்த ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர விண்ணப்பித்திருந்தது. இருப்பினும், 2013-ல் ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்க்கும் கட்சி ஆட்சியமைத்ததை தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் […]

உலகம்

ICC நீதிமன்ற அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடை – ஆதரவாக களமிறங்கிய ஐரோப்பிய ஒன்றியம்

  • August 19, 2026
  • 0 Comments

காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை விசாரிக்கும் உயர் அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்போவதாக அமெரிக்க நிர்வாகம் அறிவித்ததைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் ஐசிசி நீதிமன்றத்திற்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளனர். “உலகின் மிகக் கொடூரமான சில குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உதவுகிறது,” என்று ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். “இந்த அத்தியாவசியப் பணியைச் செய்வதற்கு, அதன் நீதிபதிகளும் அதிகாரிகளும் சுதந்திரமாகவும் வெளிப்புற அழுத்தமின்றியும் செயல்படக்கூடியவர்களாக இருக்க வேண்டும்,” என்றும் அவர்கள் […]

ஐரோப்பா

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தையில் பிரித்தானியா மீளவும் இணைய புதிய முன்மொழிவு

  • August 9, 2026
  • 0 Comments

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தையில் மீண்டும் இணையலாம் என்று பரிந்துரைக்கும் ஒரு புதிய ன்மொழிவு, பிரதமர் ஆண்டி பர்னமிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டத்தின்படி, பிரித்தானியா தனது ஆயுதப் படைகளையும் அணுசக்தித் தடுப்புப் பாதுகாப்பையும் ஐரோப்பா முழுவதும் விரிவுபடுத்த வேண்டும். இதற்குப் பதிலாக, சுதந்திரமான நடமாட்டத்தை ஏற்காமலும் யூரோவில் சேராமலும், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையற்ற வர்த்தக மண்டலத்திற்கான அணுகலைப் பெறும். இந்த முன்மொழிவை முன்னாள் டோரி நாடாளுமன்ற உறுப்பினர் நிக் போலஸ்  (Nick […]

ஐரோப்பா

நவல்னியின் மரணத்திற்குக் காரணமான 06 பேர் மீது தடை : ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி

  • July 3, 2026
  • 0 Comments

கிரெம்ளின் விமர்சகரான அலெக்ஸி நவல்னியின் மரணத்திற்குக் காரணமான நச்சுப்பொருளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த, 06 பேருக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியக் கவுன்சில் இன்று தடைகளை வித்துள்ளது. நவல்னியின் மரணத்திற்குப் பிறகு அவரது உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் கண்டறியப்பட்ட, குறிப்பாக எபிபாடிடின் போன்ற இரசாயன ஆயுதங்களை உருவாக்கும் பணியில் இந்த நபர்கள் ஈடுபட்டிருந்ததாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது. குறித்த 06 பேரும் சொத்து முடக்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பயணிக்க தடை விதிக்கப்படுவார்கள் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]

ஐரோப்பா

ஐரோப்பிய ஒன்றியத்தில் முழுமையாக இணையும் பாதையில் மாண்டினீக்ரோ!

  • May 22, 2026
  • 0 Comments

மாண்டினீக்ரோ (Montenegro) ஐரோப்பிய ஒன்றியத்தில் முழுமையாக இணைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அந்நாட்டு ஜனாதிபதி ஜாகோவ் மிலடோவிக் (Jakov Milatovic), 623,000 மக்கள் தொகையைக் கொண்ட இந்த நாடு, 2028-ஆம் ஆண்டுக்குள் 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் அடுத்த உறுப்பினராகும் தனது லட்சிய இலக்கை நிறைவேற்றும் பாதையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார். அத்துடன் நேட்டோ உறுப்புரிமையை ஒரு முக்கியமான சாதனையாகக் குறிப்பிட்டார். மேற்கு பால்கன் பிராந்தியத்தில் உள்ள ஆறு நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய […]

ஐரோப்பா

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் உக்ரைன் மீது கரிசனை!

  • April 24, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியம், உக்ரைனுக்கு €90 பில்லியன் கடனையும், ரஷ்யாவுக்கு எதிரான புதிய தடைகளையும் முறையாக அங்கீகரித்துள்ளது. அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் 21வது தடைகள் தொகுப்பிற்கான முயற்சியையும் தொடங்கியுள்ளனர். ஈரான் போர் காரணமாக உக்ரைனுக்கு வழங்கப்பட்டு வரும் ஆயுத உதவிகள் குறைவடைந்துள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் இந்த உதவி தொகுப்பு குறித்த அறிவிப்பு வந்துள்ளது. இதற்கிடையே நேட்டோவுக்கான அமெரிக்காவின் அர்ப்பணிப்பு குறித்த அதிகரித்து வரும் கவலைகள் காரணமாக, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கூட்டமைப்பின் பரஸ்பர உதவிப் பிரிவிற்கான (சரத்து […]

ஐரோப்பா

ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியாவை இணைக்க உருவாகும் புதிய சட்டமூலம்!

  • January 7, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்துடன் , பிரித்தானியாவை மீளவும் இணைப்பதற்கு பிரதமர் கெய்ர் ஸ்டாமர் புதிய சட்டம் ஒன்றை தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய சட்டத்துடன் இங்கிலாந்தை இணக்கப்படுத்த அமைச்சர்களுக்கு போதுமான  அதிகாரங்கள் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. பிரெக்ஸிட் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக முன்வைக்கப்படும் இந்த சட்டமூலம் உணவுத் தரநிலைகள், விலங்கு நலன் மற்றும் பூச்சிக்கொல்லி பயன்பாடு போன்ற சில விதிகளில், ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்ட விதிகளுக்கு ஏற்ப பிரித்தானிய அரசாங்கத்தை மாற்றும் நோக்கத்தை […]