ஐரோப்பா

நவல்னியின் மரணத்திற்குக் காரணமான 06 பேர் மீது தடை : ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி

கிரெம்ளின் விமர்சகரான அலெக்ஸி நவல்னியின் மரணத்திற்குக் காரணமான நச்சுப்பொருளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த, 06 பேருக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியக் கவுன்சில் இன்று தடைகளை வித்துள்ளது.

நவல்னியின் மரணத்திற்குப் பிறகு அவரது உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் கண்டறியப்பட்ட, குறிப்பாக எபிபாடிடின் போன்ற இரசாயன ஆயுதங்களை உருவாக்கும் பணியில் இந்த நபர்கள் ஈடுபட்டிருந்ததாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது.

குறித்த 06 பேரும் சொத்து முடக்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பயணிக்க தடை விதிக்கப்படுவார்கள் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நச்சுப்பொருள் ரஷ்யாவில் காணப்படவில்லை எனவும் இது  தென் அமெரிக்காவில் உள்ள விஷ அம்புத் தவளைகளில் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையே நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை மொஸ்கோ மறுத்து வருகிறது. அத்துடன் போதுமான ஆதாரங்களையும் கோருகிறது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்