ஐரோப்பா

சிசிலியில் 12 தொடர் நிலநடுக்கங்கள் பதிவு – சுனாமி எச்சரிக்கை

  • October 23, 2026
  • 0 Comments

இத்தாலி – சிசிலியின் வடக்குக் கடற்கரைக்கு அப்பால், 5.7 ரிக்டர் அளவு வரையிலான 12 தொடர் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து ஆரஞ்சு நிற சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலேர்மோ Palermo, மெசினா Messina, டிராபானி Trapani  மற்றும் லிபாரி Lipari ஆகிய இடங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் கட்டிடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தின் மையம் பலேர்மோவிலிருந்து Palermo  60 மைல்களுக்கும் குறைவான தொலைவில் அமைந்திருந்ததுடன், தீவில் உள்ள பல நகரங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக […]

ஐரோப்பா

ஸ்பெயினில் அடுத்தடுத்து பதிவாகிய நிலநடுக்கங்கள் – மூவர் காயம்

  • August 18, 2026
  • 0 Comments

ஸ்பெயினின் தெற்கு கிரனாடா Granada மாகாணத்தில் இன்று 4 ரிக்டர் அளவுக்கு மேற்பட்ட மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதன்போது மூன்று பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய நிலநடுக்கம் 4.7 ரிக்டர் அளவில் ஏற்பட்டது என்றும், அதன் மையப்புள்ளி கிரனாடா நகருக்கு தெற்கே 10 கி.மீ தொலைவில் இருந்ததாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து வரலாற்றுச் சிறப்புமிக்க அல்ஹம்ப்ரா Alhambra  வளாகத்தின் சில பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதை அதிகாரிகள் தடைசெய்தனர். அதே நேரத்தில் […]

உலகம்

சீனாவில் இரட்டை நிலநடுக்கங்கள் பதிவு

  • July 28, 2026
  • 0 Comments

சீனாவில் இன்று காலை இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. முதலாவது நிலநடுக்கம் 5.7 ரிக்டர் அளவில் வடமேற்கு மாகாணமான கிங்ஹாயில் பதிவாகியதாகவும், இந்த நிலநடுக்கம் பதிவாகி 18 நிமிடங்கள் கழித்து அதே கவுண்டியில் 5.8 ரிக்டர் அளவிலான இரண்டாவது நிலநடுக்கம் பதிவாகியதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நிலநடுக்கங்களும் 10 கி.மீ (6.2 மைல்கள்) ஆழத்தில் ஏற்பட்டுள்ளன. மேலும், இவை கிங்ஹாயின் தலைநகரான சின்னிங்கிலிருந்து சுமார் 244 கி.மீ தொலைவில் அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.