தமிழரசுக் கட்சியின் வழக்கு ஒத்திவைப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இடைபுகுநர் எதிராளியாகத் தம்மைச் சேர்த்துக் கொள்ளும்படி கோரி கட்சியின் உறுப்பினரான சுப்பிரமணியம் பரமானந்தம் என்பவர் தாக்கல் செய்த மனுவின் மீதான கட்டளையை அடுத்த மாதம் இறுதிக்கு – ஓகஸ்ட் 28ஆம் திகதிக்கு – திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இன்று இந்த வழக்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது மேற்படி இடைபுகுநர் எதிராளிக்கான விண்ணப்பம் தொடர்பாக வழக்காளி மற்றும் ஏனைய எதிராளிகளின் எழுத்துமூல சமர்ப்பணங்கள் […]













