ஒதுக்கீட்டு சட்டமூலத்தை நாடாளுமன்றில் முன்வைக்க அமைச்சரவை அனுமதி
2027 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
முன்னதாக, 2026 ஜூன் 30 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்ட இச் சட்டமூலத்திற்குச் சட்டமா அதிபரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.
இச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியீட்டு, பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான முன்மொழிவை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சமர்ப்பித்துள்ளார்.
அமைச்சரவையினால் இம் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2027 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிப்பதற்கான வழிவகை ஏற்பட்டுள்ளது.





