பிரான்ஸில் மீண்டும் வெடித்த போராட்டம்: 1,000 பேர் கைது
பிரான்ஸில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பாடசாலைகளின் மோசமான நிலைமைகளைக் கண்டித்து, சனிக்கிழமை நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் சுமார் 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நூறாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்தப் போராட்டங்கள் பெரும்பாலும் அமைதியான முறையில் நடைபெற்ற போதிலும், பின்னர் பல நகரங்களில் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. பாரிஸ் உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டக்காரர்களைக் கலைப்பதற்காகப் பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் நீர்த்தாரைகளையும் பயன்படுத்தினர். மார்செய் நகரில் வீதித் தடுப்புகள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், […]













