மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஈரானுடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்றும், இனி தெஹ்ரானுடன் எவ்வித தொடர்பையும் வைத்துக்கொள்ள தான் விரும்பவில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப புதன்கிழமை (ஜூலை 08) தெரிவித்துள்ளார். உலகம் செய்தி

பேச்சுகளை தொடருமாறு ஈரான் கோரிக்கை: ட்ரம்ப் தகவல்

  • July 10, 2026
  • 0 Comments

ஈரான் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து, அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். எனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான போர்நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார். பாகிஸ்தான் மற்றும் கத்தாரின் மத்தியஸ்தத்துடன், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் தற்காலிக போர்நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக 60 நாட்கள் போரை நிறுத்த இரு தரப்புகளும் இணங்கியிருந்தன. இந்நிலையிலேயே, அமெரிக்கா கடந்த 7ஆம்திகதி ஈரான் மீது திடீர் தாக்குதலை நடத்தியது. இவ்வாறானதொரு பின்னணியில்தான், […]

இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து நியூசிலாந்தின் ஆக்லாந்து நகருக்குச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா செய்தி

40 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து சென்ற ‘இந்திய பிரதமர்’: வரலாறுகாணாத வரவேற்பு

  • July 10, 2026
  • 0 Comments

இரு நாட்கள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று நியூசிலாந்து சென்றடைந்தார். ஆக்லாந்து விமான நிலையத்தில் அவரை, அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் ஆரத்தழுவி வரவேற்றார். இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து நியூசிலாந்தின் ஆக்லாந்து நகருக்குச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்துக்கே வந்து வரவேற்றார். கடந்த 40 […]

தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு உட்பட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. செய்தி

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை

  • July 10, 2026
  • 0 Comments

தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு உட்பட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தால் இன்று மேற்படி உத்தரவு வழங்கப்பட்டது. நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். அதேபோல, கரூர் தொகுதி எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி எம்எல்ஏ -சி.விஜயபாஸ்கர், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆகியோரும் […]

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை 12 ஆவது வாரமாகவும் அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்தனர். செய்தி

சொந்த மண்ணை மீட்க யாழில் 12 ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

  • July 10, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை 12 ஆவது வாரமாகவும் அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்தனர். பலாலி, மயிலிட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இராணுவத்தின் கொமாண்டோ பங்களாவுக்கு முன்பாக ஒன்று திரண்ட மக்கள், தங்களுக்குச் சொந்தமான நிலங்களை மீளப் பெற்றுத் தருமாறு வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதமளவில், அப்பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள், […]

வாசனைச் சோப்புக்குள் நூதனமான முறையில் மறைத்து வைத்து, யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் விற்பனைக்காக ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்திச் சென்ற நபர் ஒருவர் யாழ். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

சோப்புக்குள் ஹெரோயின்: யாழில் நூதனக் கடத்தல் முறியடிப்பு

  • July 10, 2026
  • 0 Comments

வாசனைச் சோப்புக்குள் நூதனமான முறையில் மறைத்து வைத்து, யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் விற்பனைக்காக ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்திச் சென்ற நபர் ஒருவர் யாழ். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளில் போதைப்பொருள் வியாபாரம் இரகசியமாக இடம்பெறுகின்றது என்று கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து, யாழ். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும், பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட விசேட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். உடுவில் பிரதேசத்தைச் சேர்ந்த […]

யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் வழிகாட்டலிலும், வடக்கு மாகாண சுற்றுலாத்துறை தலைவர் வைத்தியர் விவேகானந்தராஜாவின் கோரிக்கை மற்றும் யாழ். மாநகர சபையின் ஒத்துழைப்புடனும் இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்திலிருந்து யாசகர்கள் வெளியேற்றம்

  • July 10, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் நகரின் தூய்மையைப் பேணுவதற்கும், சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்பட்டு வரும் அசௌகரியங்களைத் தடுப்பதற்கும், வெளி மாவட்டங்களிலிருந்து வந்து யாசகம் பெற்று வந்த 30 இற்கும் மேற்பட்ட நபர்கள் இன்று பொலிஸாரால் வெளியேற்றப்பட்டனர். யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் வழிகாட்டலிலும், வடக்கு மாகாண சுற்றுலாத்துறை தலைவர் வைத்தியர் விவேகானந்தராஜாவின் கோரிக்கை மற்றும் யாழ். மாநகர சபையின் ஒத்துழைப்புடனும் இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. யாழ். கோட்டைச் சுற்றுவட்டம், மத்திய பஸ் நிலையம், கஸ்தூரியார் வீதி, மின்சார […]

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் படுகொலைக்காக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளை பழிதீர்ப்போம் என்று இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தலைமைத் தளபதி சபதம் செய்துள்ளார். உலகம் செய்தி

அமெரிக்கா, இஸ்ரேலை பழி தீர்ப்போம்: ஈரான் தளபதி சபதம்

  • July 10, 2026
  • 0 Comments

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் படுகொலைக்காக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளை பழிதீர்ப்போம் என்று இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தலைமைத் தளபதி சபதம் செய்துள்ளார். மேலும், இந்தச் சம்பவம் வரலாற்று நினைவிலிருந்து ஒருபோதும் அழியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரிகேடியர் ஜெனரல் அகமது வாஹிதி (Brigadier-General Ahmad Vahidi), “நீதி முழுமையாக நிலைநாட்டப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு, குறிப்பாக குழந்தைகளைக் கொல்லும் அமெரிக்க ராணுவத்திற்கு தகுந்த பதில்டி கொடுக்கப்பட வேண்டும்” என்றும் […]

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே சமீபகாலமாக நிலவும் பதட்டங்களுக்கு முக்கிய காரணம், ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு மற்றும் அதன் வழியாகச் செல்லும் சர்வதேச கப்பல் போக்குவரத்து தொடர்பான கருத்து வேறுபாடுகளே ஆகும். உலகம் செய்தி

ஹோர்முஸ் நீரிணைப் பிரச்சினை: அமெரிக்காவும் ஈரானும் ஏன் மீண்டும் மோதிக் கொள்கின்றன?

  • July 10, 2026
  • 0 Comments

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே சமீபகாலமாக நிலவும் பதட்டங்களுக்கு முக்கிய காரணம், ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு மற்றும் அதன் வழியாகச் செல்லும் சர்வதேச கப்பல் போக்குவரத்து தொடர்பான கருத்து வேறுபாடுகளே ஆகும். இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போரின் போது, ​​ஈரான் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியது மட்டுமல்லாமல், உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கான முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையையும் மூடியது. இது உலகச் சந்தையில் எண்ணெய் விலைகள் கணிசமாக அதிகரிக்க வழிவகுத்தது. போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு, […]

அறிவியல் & தொழில்நுட்பம் உலகம் செய்தி

விண்வெளிப் போட்டியில் சீனா சாதனை

  • July 10, 2026
  • 0 Comments

மறுபயன்பாட்டு ராக்கெட் தொழில்நுட்பத்தில் (Reusable rockets) அமெரிக்காவின் ஆதிக்கத்தை முறியடிக்கும் நோக்கில், கடல் தளத்தில் அமைக்கப்பட்ட வலை (Net) மூலம் சோதனை ரீதியிலான ராக்கெட் மீட்பு அமைப்பை சீனா வெற்றிகரமாகச் சோதித்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வெள்ளிக்கிழமை சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஹைனான் (Hainan) வணிக விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ‘லாங் மார்ச் 10B’ (Long March 10B) ராக்கெட் ஏவப்பட்டது. அதன் பூஸ்டர் (Booster) மற்றும் மேல் அடுக்கு பிரிந்த சுமார் ஆறு […]

நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. அரசியல் இலங்கை செய்தி

நீதி அமைச்சருக்கு எதிராக பிரேரணை: எதிரணிகள் வியூகம்

  • July 10, 2026
  • 0 Comments

நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டே அவருக்கு எதிராக பிரேரணை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரேரணையில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கை இன்று ஆரம்பமானது. இதற்கிணங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இன்று கையெழுத்திட்டனர்.