இலங்கை, பெலாரஸ் வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு!
பெலாரசுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை, பெலாரஸ் வெளியுறவு அமைச்சர் மாக்சிம் ரைசென்கோவ் (Maxim Ryzhenkov) சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இதன்போது, பெலாரசும் இலங்கையும், தங்கள் உறவுகளை ஒரு புதிய நிலைக்குக் கொண்டு செல்லும் ஆற்றலைக் கொண்டுள்ளன என்று பெலாரஸ் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு ஏற்கனவே உறுதியான பலன்களைத் தந்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “பெலாரசுக்கும் இலங்கைக்கும் இடையே அண்மையில் நேரடி விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், […]













