செவ்வாய்க்கிழமை துருக்கி தலைநகர் அங்காராவிற்கு வருகை தந்த ட்ரம்ப், இம்மாநாட்டை நடத்துகின்ற துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகனுடனான தனது நட்பு மட்டும் இல்லையென்றால், தான் இந்த உச்சிமாநாட்டைப் புறக்கணித்திருக்கக்கூடும் என்று கூறினார். ஐரோப்பா செய்தி

நேட்டோவிலிருந்து வெளியேறுமா அமெரிக்கா?

  • July 8, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் போர் மற்றும் கிரீன்லாந்து (Greenland) விவகாரங்கள் தொடர்பாக ஐரோப்பிய நாடுகளுடன் மீண்டும் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேட்டோ ராணுவக் கூட்டணியில் அமெரிக்கா தொடர்ந்து நீடிப்பதை உறுதி செய்யுமாறு ட்ரம்பை சமாதானப்படுத்த ஐரோப்பிய தலைவர்கள் முயன்று வருகின்றனர். செவ்வாய்க்கிழமை துருக்கி தலைநகர் அங்காராவிற்கு வருகை தந்த ட்ரம்ப், இம்மாநாட்டை நடத்துகின்ற துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகனுடனான தனது நட்பு மட்டும் இல்லையென்றால், தான் இந்த உச்சிமாநாட்டைப் புறக்கணித்திருக்கக்கூடும் என்று கூறினார். […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்துக்கு பின்னால் சூழ்ச்சி?

  • July 8, 2026
  • 0 Comments

அரசியல் தேவைக்காகவே அன்று சிறைச்சாலைக்குள் குட்டிமணி படுகொலை செய்யப்பட்டார். வெலிக்கடை சிறைச்சாலைச் சம்பவத்திலும் அரசியல் பின்புலம் இருந்தது. எனினும், நீர்கொழும்பு சம்பவத்தின் பின்னணியில் ஆளுங்கட்சியின் நிகழ்ச்சி நிரல் எதுவும் இல்லை என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பாதாள உலகக் குழுக்களுக்கு எதிராக அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. எனவே, இச்சம்பவம் அதற்குப் பதிலடியாக அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் உள்ளது எனவும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் […]

பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியை நேரில் சந்தித்து, இவ்விடயம் தொடர்பாக விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார். இலங்கை செய்தி

பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய திருவிழாவை முன்னிட்டு வீதி திறப்பு

  • July 8, 2026
  • 0 Comments

பலாலி இராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழாவை முன்னிட்டு, ஆலயத்திற்குச் செல்லும் பிரதான பாதையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர். மக்களின் கோரிக்கைக்கு உடனடியாக பதிலளித்த அமைச்சர், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கினார். அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியை நேரில் சந்தித்து, இவ்விடயம் தொடர்பாக விரிவான கலந்துரையாடலை […]

நீர்கொழும்பிலிருந்து யாழ்.சிறைச்சாலைக்கு 60 கைதிகள் மாற்றம் இலங்கை செய்தி

நீர்கொழும்பிலிருந்து யாழ்.சிறைச்சாலைக்கு 60 கைதிகள் மாற்றம்

  • July 8, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர் பலத்த பாதுகாப்புடன் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு தினங்களாகக் கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற பயங்கர மோதல்களில், சிறைக் காவலர்கள் உட்பட 27 பேர் உயிரிழந்துள்ளமையுடன், 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்தத் துரதிர்ஷ்டவசமான கோரச் சம்பவத்தையடுத்து, நீர்கொழும்பு சிறைச்சாலை அமைந்துள்ள பகுதி முழுவதும் இன்னும் தணியாத பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. இவ்வாறானதொரு பின்னணியில், […]

ஈரானின் தெற்குப் பகுதிகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை அந்நாட்டு ராணுவம் கடுமையாகக் கண்டித்துள்ளது. உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க தலையீட்டை ஏற்க முடியாது: ஈரான் திட்டவட்டம்

  • July 8, 2026
  • 0 Comments

ஈரானின் தெற்குப் பகுதிகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை அந்நாட்டு ராணுவம் கடுமையாகக் கண்டித்துள்ளது. இந்த நடவடிக்கையை ஒரு நேரடி ஆக்கிரமிப்பு என்று சுட்டிக்காட்டியுள்ள ஈரான், இதற்குப் பதிலடியாகப் பயங்கரமான தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளது. குறிப்பாக, உலக வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்காவின் தலையீட்டைத் தாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று ஈரான் ராணுவம் தெளிவுபடுத்தியுள்ளது. அந்த கடல் வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் டேங்கர்கள் ஈரானால் தீர்மானிக்கப்படும் […]

ஈரான் சபாநாயகரும், பேச்சுவார்த்தைக்குழு தலைவருமான Mohammed Bagher Ghalibaf உலகம் செய்தி

உறுதிமொழியை மீறிவிட்டது அமெரிக்கா: அடிபணியமாட்டோம்

  • July 8, 2026
  • 0 Comments

அமெரிக்கா தனது வாக்குறுதிகளை மீறியுள்ளதாக ஈரானிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் பகிரங்கமாகக் Mohammad Baqer Qalibaf குற்றம் சாட்டியுள்ளார். கடந்த மாதம் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் நான்கு மாதங்களாக நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டன. தற்போது வரை இந்த விவாதங்களில் எந்தவொரு உறுதியான முடிவும் எட்டப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஈரானியத் தலைமை அமெரிக்காவிற்குப் பணியப் போவதில்லை என்பதை கலிபாஃப் தனது சமூக ஊடகப் பதிவின் மூலம் […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஹார்முஸ் நீரிணையில் பதற்றம்: ஈரான்மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

  • July 8, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) மூன்று எண்ணெய் கப்பல்கள் (Oil tankers) மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அமெரிக்க மத்திய கட்டளைகம் (Centcom) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ஹார்முஸ் நீரிணையில் இருந்த ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) 60-க்கும் மேற்பட்ட சிறிய படகுகள் உட்பட 80-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் கடந்த மாதம் கையெழுத்தான அமெரிக்க-ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறும் […]

FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரில் எகிப்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜெண்டினா அணி த்ரில் வெற்றி பெற்றது . செய்தி விளையாட்டு

அர்ஜென்டினா த்ரில் வெற்றி – கண்கலங்கினார் மெஸ்ஸி

  • July 8, 2026
  • 0 Comments

FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரில் எகிப்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜெண்டினா அணி த்ரில் வெற்றி பெற்றது . அட்லாண்டா நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 2-0 என்ற கணக்கில் பின்னடைவில் இருந்தது நடப்பு உலக சாம்பியனான அர்ஜெண்டினா அணி. ஆட்டத்தின் முதல் 78 நிமிடங்கள் வரை எகிப்து அணி முன்னிலையில் இருந்தது. அடுத்த சில நிமிடங்கள் தாக்கு பிடித்தால் காலிறுதிக்கு அந்த அணி முன்னேறி இருக்கும். ஆனால், அந்த சவாலை […]

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது T20 போட்டியில் இந்தியா அணி படுதோல்வி அடைந்துள்ளது. செய்தி விளையாட்டு

இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து சாதனை வெற்றி

  • July 8, 2026
  • 0 Comments

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது T20 போட்டியில் இந்தியா அணி படுதோல்வி அடைந்துள்ளது. பில் சால்ட்டின் அதிரடியான 70 ரன்கள் உதவியோடு, இங்கிலாந்து நிர்ணயித்த 202 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்தியா, ஒட்டுமொத்தமாகவே வெறும் 76 ரன்களுக்கு சுருண்டது. இது T2 போட்டிகளில் இந்தியாவின் இரண்டாவது மிகக் குறைந்த ஸ்கோராகும். இங்கிலாந்தின் 90mph வேகப்பந்து வீச்சாளர்களான ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜோஷ் டங் ஆகிய இருவரும் இணைந்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவை நிலைகுலையச் செய்தனர். […]

அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் தொடருமானால் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். உலகம் செய்தி

‘அமெரிக்காவுடன் பேச்சு நடத்த முடியாது’- ஈரான் திட்டவட்டம்

  • July 7, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் தொடருமானால் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். “ஈரானின் மறைந்த உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியையும் அவரது பாரம்பரியத்தையும் கவுரவிக்கும் நோக்கில் அவரது இறுதிப் பேரணியில் லட்சக்கணக்கான ஈரானியர்கள் பெருமையுடனும் ஒற்றுமையுடனும் ஒன்றுகூடினர். மக்களோ, ஈரானின் வீரமிக்க ஆயுதப்படைகளோ எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அஞ்சவில்லை.” எனவும் அவர் சூளுரைத்துள்ளார். ஈரான் – அமெரிக்கா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் 13-வது பிரிவு ஒன்றை தெளிவுபடுத்தியுள்ளது. அச்சுறுத்தல்கள் […]