சீனாவும் ஐரோப்பாவும் வர்த்தக போர்களில் ஈடுபடக் கூடாது – வாங் வலியுறுத்து
சீனாவும் ஐரோப்பாவும் விரிவான மூலோபாய கூட்டாளிகள் என்பதால், வர்த்தகப் போர்களில் ஈடுபடக்கூடாது என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, தெரிவித்துள்ளார். ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஜோஹான் வாடேஃபுல்லிடம் Johann Wadephul தொலைபேசி உரையாடலில் ஈடுபட்ட அவர் இவ்வாறு கூறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள வாங், பரஸ்பரம் நன்மை பயக்கும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது இரு தரப்பினரின் நலன்களுக்கும் உகந்தது மற்றும் அதுவே “சரியான தேர்வு” என்று கூறியுள்ளார். அத்துடன் […]




