உலகம்

அவுஸ்திரேலியாவில் சிறிய ரக விமானம் விபத்து ; 2 பேர் பலி

  • April 29, 2026
  • 0 Comments

அவுஸ்திரேலியாவின்  Parafield  விமான நிலையத்தில் சிறிய ரக விமானமொன்று இன்று புதன்கிழமை (29) விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்ததோடு 11 பேர் காயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்த விமானம் தரையிறங்குவதற்கு முயன்ற போது விமானக் கூடாரத்துக்குள் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. Diamond DA42 என்ற இரட்டை எஞ்சின் அமையப்பெற்ற சிறிய ரக பயிற்சி விமானமே விபத்தில் சிக்கியுள்ளது. விமானத்துக்குள் இருந்த விமானியும் பயணி ஒருவருமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். அத்தோடு, விமானக்கூடாரத்துக்குள் விமானம் மோதியபோது அந்த […]

உலகம் செய்தி

ஈரானில் 21 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

  • April 29, 2026
  • 0 Comments

போர் தொடங்கிய காலத்திலிருந்து ஈரானில் குறைந்தபட்சம் 21 நபர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமை அலுவலகத்தின் தரவுகளின் அடிப்படையில் மேற்படி தகவல் வெளியாகியுள்ளது. அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டவர்கள், எதிர்க்கட்சிகளுடன் தொடர்புடையவர்கள் மற்றும் உளவாளிகளுக்கு எதிராக ஈரான் கடும் நடவடிக்கை எடுத்துவருகின்றது. இதே காலகட்டத்தில் ஈரானில் 4,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரானிய அதிகாரிகளின் இத்தகைய கொடூரமான அடக்குமுறைகளை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் வன்மையாகக் கண்டித்துள்ளார். போர் சூழலுக்கு மத்தியிலும் […]

இலங்கை செய்தி

மலையக மக்களின் அறவழிப் போராட்டத்துக்கு தமிழரசுக் கட்சி ஆதரவு!

  • April 29, 2026
  • 0 Comments

“நாம் நீலகாமம்” அற வழிப் போராட்டத்துக்கு நாமும் எமது முழு பங்களிப்பை வழங்குவோம் – என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான, யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். நீலகாமம் மக்களுக்கு நீதி கோரியும், மலையக மக்களுக்கு காணி உரிமை விரைவில் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் கொழும்பில் எதிர்வரும் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ள போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் சிறிதரன் எம்.பி. மேலும் கூறியவை […]

உலகம் செய்தி

நேட்டோ அமைப்பின் அவசியத்துவத்தை வலியுறுத்திய மன்னர்!

  • April 29, 2026
  • 0 Comments

அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் நேட்டோ கூட்டணியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். ஈரான்மீதான ராணுவ நடவடிக்கைக்கு நோட்டோ உதவவில்லை என ட்ரம்ப் விமர்சித்துவருகின்றார். குறித்த அமைப்பை காகிதப் புலி எனக்கூட விளாசித் தள்ளி இருந்தார். இந்நிலையிலேயே நேட்டோவுக்கு ஆதரவாக மன்னர் குரல் கொடுத்துள்ளார். அமெரிக்காவில் நடந்த 9/11 தாக்குதலுக்குப் பிறகு நேட்டோவின் பாதுகாப்பு ஒப்பந்தம் பயன்படுத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டிய மன்னர், தற்போதைய சவாலான உலகச் சூழலில் இந்த ஒற்றுமை அவசியம் என்பதையும் […]

உலகம் செய்தி

இஸ்ரேல் தாக்குதல் : 24 மணிநேரத்துக்குள் காசாவில் ஐவர் பலி!

  • April 29, 2026
  • 0 Comments

காசாவில் கடந்த 24 மணிநேரத்துக்குள் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஐவர் பலியாகியுள்ளனர். ஏழு பேர் காயமடைந்துள்ளனர். பாலஸ்தீன சுகாதார அமைச்சு மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. அதேவேளை, 2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 72 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தற்போது போர் நிறுத்தம் அமுலில் இருந்தாலும் இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல்களை நடத்திவருகின்றது. போர் நிறுத்தகாலப்பகுதியில் மட்டும் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இலங்கை

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

  • April 29, 2026
  • 0 Comments

கோதுமை மாவின் விலையை இன்று (29) முதல் அதிகரிப்பதற்கு ப்ரீமா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, ப்ரீமா நிறுவனத்தின் கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலையை 5 ரூபாவினால் அதிகரிப்பதற்கு அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதற்கு முன்னர் 220 ரூபாவாகக் காணப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் புதிய விலை 225 ரூபாவாகும். போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளமையே இந்த விலை உயர்விற்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி

ஈரான் வசம் அணு ஆயுதம் இருக்கக்கூடாது என்பதில் மன்னர் உறுதி: ட்ரம்ப் தகவல்!

  • April 29, 2026
  • 0 Comments

ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாது என்ற விடயத்தில் மன்னர் King Charles III தன்னுடன் உடன்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு சென்றுள்ள பிரிட்டன் மன்னருக்கு அங்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. டொனால்ட் ட்ரம்பால் மன்னருக்கு விசேட விருந்தளிக்கப்பட்டது. இந்நிலையிலேயே ட்ரம்ப் மேற்கண்டவாறு கூறியுள்ளார். ட்ரம்பின் மேற்படி கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக பக்கிங்ஹாம் அரண்மனை விளக்கம் அளித்துள்ளது. அதில், அணு ஆயுதப் பரவலைத் தடுப்பதில் பிரிட்டிஷ் அரசாங்கம் கொண்டுள்ள நீண்டகால நிலைப்பாட்டை மன்னர் நன்கு அறிவார் […]

விளையாட்டு

மும்பை, ஹைதராபாத் அணிகள் இன்று மோதல்!

  • April 29, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்று இரவு நடைபெறும் 41 ஆவது லீக் போட்டியில் Mumbai Indians, Sunrisers Hyderabad ஆகிய அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகும். ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 7 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. கடைசியாக சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்திருந்தது. […]

இலங்கை

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

  • April 29, 2026
  • 0 Comments

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு, இன்று (29) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 27ஆம் திகதி காலை இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட அவர், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இன்றைய தினம் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவருக்குப் பிணை வழங்கப்பட்டது.

ஆஸ்திரேலியா செய்தி

அரசியல்வாதிக்கு விமானத்தை பரிசளித்த தொழில் அதிபர்!

  • April 29, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் பெரும் கோடீஸ்வரரான Gina Rinehart, அந்நாட்டின் One Nation கட்சித் தலைவரான பாலின் ஹான்சனுக்கு சுமார் ஒரு மில்லியன் டாலர் மதிப்பிலான நவீன ரக விமானத்தைப் பரிசாக வழங்கியுள்ளார். இந்த விமானத்துடன் Senator Hanson னின் நெருங்கிய நண்பர்களிடமிருந்து அக்கட்சிக்கு கூடுதல் நிதியுதவியும் கிடைத்துள்ளது, இது அக்கட்சி தனது தேர்தல் பிரச்சாரங்களை நாடு முழுவதும் தீவிரப்படுத்த உதவும். இருப்பினும், இந்த பெரும் நன்கொடை அரசியல் வட்டாரத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளதுடன், பாலின் ஹான்சன் தொழிலாளர்களின் நலன்களை விட […]