ஹார்முஸ் நீரிணைபாதுகாப்பு: பிரிட்டன், பிரான்ஸ் கைகோர்ப்பு!
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் எட்டப்பட்டுள்ள அமைதி உடன்பாட்டை பிரிட்டன் பிரதமர் Keir Starmer வரவேற்றுள்ளார்.
இது மிகவும் குறிப்பிடத்தக்க திருப்புமுனை எனவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து கடந்த சனிக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் தான் விரிவாக பேச்சு நடத்தியதாகவும் Keir Starmer
குறிப்பிட்டுள்ளார்.
G7 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் Keir Starmer ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில் கூறியவை வருமாறு ,
“இந்த உடன்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த சில வாரங்களாக இது குறித்துப் பல மட்டங்களில் தீவிர ஆலோசனைகள் நடந்து வந்தன.
அமைதி முயற்சி முழுமையாக வெற்றியடைவதை உறுதி செய்ய, உலகத் தலைவர்களுடன் இணைந்து என்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.
ஆனால், தற்போதைய சூழலில் எதற்கும் நூறு சதவீத உத்தரவாதம் அளிக்க முடியாது என்பதை நாம் நேர்மையாக ஒப்புக்கொள்ள வேண்டும்
ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கும் போது, சர்வதேசக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஆயத்தப் பணிகளைப் பிரிட்டனும் பிரான்சும் ஏற்கனவே தொடங்கியுள்ளன.” – என்றார்.




