இலங்கை

நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

  • April 29, 2026
  • 0 Comments

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, சற்றுமுன்னர் சிறைச்சாலை நடைமுறைகளுடன் மல்லாகம் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். கடந்த 27ஆம் திகதி காலை இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட அவர், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.  

இலங்கை செய்தி

இலங்கை வருகிறார் வியட்நாம் ஜனாதிபதி: நாடாளுமன்றிலும் உரை!

  • April 29, 2026
  • 0 Comments

வியட்நாம் ஜனாதிபதி டோ லாம்  To Lam எதிர்வரும் 07 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விடுத்த அழைப்பின் பிரகாரமே இரு நாள் பயணமாக அவர் கொழும்பு வருகின்றார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்டவர்களை அவர் சந்தித்து பேச்சு நடத்துவார். 8 ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றுவார் என தெரியவருகின்றது. அதேவேளை, மாலைதீவு ஜனாதிபதி எதிர்வரும் 3 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார். இவ்விஜயத்தின்போது […]

இலங்கை செய்தி

இலங்கை மீனவர்மீது இந்தியாவில் தாக்குதல்: அமைச்சர் கண்டனம்!

  • April 29, 2026
  • 0 Comments

இலங்கை மீனவரொருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மனித உரிமைகளை மீறும் அதேவேளை, அண்டை நாடுகளுக்கிடையிலான பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையையும் பாதிக்கும் வகையிலானது என அவர் வலியுறுத்தினார். குறிப்பாக, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதிப்படுத்துவது எந்த நாட்டிற்கும் அடிப்படைப் பொறுப்பாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். “ இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் கடத்தப்பட்ட சிறுமியை தேடி தொடர்கிறது வேட்டை!

  • April 29, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் ஆலிஸ் ஸ்பிரிங்ஸில் கடத்தப்பட்ட சிறுமியை தேடும் பணி இன்று 4 ஆவது நாளாக தொடர்கின்றது. சிறையிலிருந்து விடுதலையான ஜெபர்சன் லூயிஸ் என்பவராலேயே அச்சிறுமி கடத்தப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். காவல்துறையினருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதில் இருந்து தேடுதல் வேட்டை இடம்பெறுகின்றது. தற்போது நான்காவது நாளை எட்டியுள்ள இந்தத் தீவிரத் தேடுதல் வேட்டையில், ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் மற்றும் குதிரைப்படை வீரர்களுடன் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களும் இணைந்துள்ளனர். அந்தச் சிறுமி இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பும் அதிகாரிகள், அப்பகுதியின் கரடுமுரடான நிலப்பரப்பில் […]

இலங்கை

அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு

  • April 29, 2026
  • 0 Comments

நடைமுறையிலுள்ள பொது அவசரகால நிலையை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்து இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. அத்துடன், சுகாதாரம், மின்சாரம், நீர், பெற்றோலிய விநியோகம் உள்ளிட்ட 15 சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அரசியல் இலங்கை செய்தி

தையிட்டி விவகாரத்தில் மக்களுக்கு அநீதி இழைக்கப்படாது!

  • April 29, 2026
  • 0 Comments

“NPP ஆட்சிக் காலத்தில் விகாரைத் தேவைகளுக்காக மக்களின் காணிகள் ஒருபோதும் சுவீகரிக்கப்படமாட்டாது” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதியாகத் தெரிவித்தார். காணி அளவீட்டுப் பணிகளின் போது ஏற்பட்ட குழப்பங்கள் மற்றும் அது தொடர்பாக முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து ஊடகங்களிடம் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில், “நாம் ஏற்கனவே பலமுறை கூறியது போல, மக்களின் காணிகளை அவர்களிடமே மீள ஒப்படைப்பதில் அரசு உறுதியாக உள்ளது. தையிட்டி […]

விளையாட்டு

பஞ்சாப் அணியை பந்தாடியது ராஜஸ்தான்!

  • April 29, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 40 ஆவது லீக் ஆட்டத்தில் Rajasthan Royals அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய Punjab Kings அணிக்கு பிரப்சிம்ரன் சிங் (59) மற்றும் பிரியான்ஷ் ஆர்யா (29) ஜோடி அதிரடியான தொடக்கத்தை வழங்கியது. பின்னர் வந்த அணித் தலைவர் ஸ்ரேயஸ் ஐயர் 30 ஓட்டங்கள் எடுக்க, ஆட்டத்தின் போக்கை மாற்றிய மார்கஸ் ஸ்டோய்னிஸ், வெறும் 22 பந்துகளில் 62 ஓட்டங்கள் (4 பவுண்டரிகள், 6 […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி, மகாநாயக்க தேரர்கள் அவசர சந்திப்பு! பின்னணி என்ன?

  • April 28, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், மூன்று பிரதான பௌத்த பீடங்களி ன்மகா சங்கத்தினருக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று (27) நடைபெற்றது. இன்று பிற்பகல் மேற்படி சந்திப்பு இடம்பெற்றது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் பிக்குகள் சிலர் கைது செய்யப்பட்டமை மற்றும் அது தொடர்பான விசாரணைகள், அதனால் எழுந்துள்ள நிலைமைகள் குறித்து கலந்துரையாடும் நோக்கிலேயே சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தற்போது போதைப்பொருள் அச்சுறுத்தல் ஒரு தேசிய பேரழிவாக மாறியுள்ளதை இந்தச் சம்பவம் உறுதிப்படுத்துவதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, போதைப்பொருளுக்கு எதிராக அரசாங்கம் […]

அரசியல் இலங்கை செய்தி

மலையக தமிழர்களுக்கு காணி உரிமை வழங்குமாறு வலியுறுத்து!

  • April 28, 2026
  • 0 Comments

கொழும்பில் எதிர்வரும் 05 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள “நாம் நீலகாமம்” போராட்டத்துக்கு ஐக்கிய சோசலிசக் கட்சி முழுமையான ஆதரவை வழங்கும் என அதன் பொதுச்செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார். “மலையகத் தமிழர்” என அடையாளம் வழங்குவதற்கு அப்பால் அவர்கள் அர்த்தமுள்ள பிரஜைகளாக வாழ்வதற்குரிய நிலம் உட்பட அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இது தொடர்பில் சிறிதுங்க ஜயசூரிய கூறியவை வருமாறு, “இலங்கையென்பது ஜனநாயக நாடு. சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு காவல்துறை இருக்கின்றது. […]

இலங்கை செய்தி

வவுனியா மாநரசபையில் நிர்வாக் சீர்கேடு: ஆளுநர் பிறப்பித்துள்ள உத்தரவு!

  • April 28, 2026
  • 0 Comments

வவுனியா மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில், ஓய்வுபெற்ற நீதிபதியின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். மக்களின் வரிப்பணத்தை முறையற்ற வகையில் கையாள்வதைத் தடுக்கும் நோக்கில், சர்ச்சைக்குரிய வேலைத்திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை உடனடியாக நிறுத்துமாறும், சட்டவிரோத வரி அறவீடுகளைக் கைவிடுமாறும் ஆளுநர் விடுத்துள்ள அறிவுறுத்தலுக்கு அமைவாக உள்ளூராட்சி ஆணையாளரால் வவுனியா மாநகர சபை ஆணையாளருக்குக் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. வவுனியா […]