உலகம் செய்தி

சுரேஷ் சலே விசாரணைக்கு அஞ்சுவது ஏன்?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தனக்கு தொடர்பு இல்லையெனில், சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,

“சுரேஷ் சலே புலனாய்வு அதிகாரியாக, அரச அதிகாரியாக இருந்தவர். எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தனக்கு தெரிந்தவற்றை கூறி, விசாரணைக்கு அவர் ஒத்துழைக்க வேண்டும்.

மேற்படி தாக்குதல் சம்பவத்துடன் அவருக்கு தொடர்பில்லையெனில், விசாரணைக்கு ஒத்துழைப்பதே சிறந்தது. குற்றவாளியெனில்தான் விடயங்களை மறைக்க முற்பட வேண்டும்.

அதேவேளை, இப்ராஹிம் தொடர்பில் நீதிமன்றம்தான் பிணை வழங்கியது. அவரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனில் பாதுகாப்பு தரப்பு அதனை செய்யும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி, அதற்கு உதவியவர்கள் உட்பட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதே எமது எதிர்பார்ப்பாகும்.” – என்றார் நளிந்த ஜயதிஸ்ஸ .

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி