Bedford பகுதியில் கோர விபத்து: ரயில் சாரதி பலி – 88 பேர் காயம்
Bedford பகுதியில் இரு ரயில்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில், ரயில் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 89 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தை காவல்துறை ‘பேரிடர் சம்பவமாக’ (Major Incident) அறிவித்துள்ளது.
காயமடைந்தவர்களில் 11 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்றும், 22 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என்றும் East of England ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை மதியம், லண்டன் செயின்ட் பான்க்ராஸ் (London St Pancras) நோக்கி சென்று கொண்டிருந்த இரண்டு ‘ஈஸ்ட் மிட்லாண்ட்ஸ் ரயில்வே’ (EMR) சேவைகள் இந்த விபத்தில் சிக்கியுள்ளன.
விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் விசாரணை நடந்து வருகிறது.
இந்த விபத்தில் ஒரு ரயில் சாரதி ஒருவர் துரதிர்ஷ்டவசமாகக் உயிரிழந்துள்ளார் என்ற செய்தியைக் கேட்டு பெரும் அதிர்ச்சியடைந்துள்ளதாக RMT பொதுச் செயலாளர் எடி டெம்ப்ஸே தெரிவித்துள்ளார்.
விபத்தையடுத்து லண்டன் செயின்ட் பான்க்ராஸ் நிலையத்திற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் ஈஸ்ட் மிட்லாண்ட்ஸ் ரயில்வே சேவைகள் வெள்ளிக்கிழமை மாலை முழுவதும் ரத்து செய்யப்பட்டன. இந்தத் தடங்கல் சனிக்கிழமையும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




