செய்தி விளையாட்டு

ஜனாதிபதியை சந்தித்தார் ICC தலைவர்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) தலைவர் ஜெய் ஷாவுக்கும் (Jay Shah) இடையிலான சந்திப்பு இன்று (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) தலைவர் ஜெய் ஷாவுக்கும் (Jay Shah) இடையிலான சந்திப்பு இன்று (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கை கிரிக்கெட் சபையை நிர்வகிக்க அரசு தற்காலிகக் குழுவை நியமித்திருப்பது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிகளுக்கு முரணாக இருப்பதாகக் கருதப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக ஐசிசி ஏற்கனவே தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளதோடு, காலதாமதமின்றி ஜனநாயக முறையில் தேர்தல்களை நடத்துமாறு வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையிலேயே மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சந்திப்பு நடந்தது என்ற தகவலை மட்டுமே புகைப்படத்துடன் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. பேசப்பட்ட விடயங்கள் பற்றி இன்னும் தெரியப்படுத்தப்படவில்லை.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி