ஐரோப்பா

ரோம் நோக்கிச் சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • November 5, 2026
  • 0 Comments

டப்ளினிலிருந்து ரோம் நோக்கிச் சென்ற ஏர்பஸ் A320 ரக விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த விமானம் பிரான்சின் எவ்ரூ (Evreux) விமான தளத்திற்குத் திருப்பி விடப்பட்டது. ஐரோப்பாவில் விமானங்களை இலக்காகக் கொண்டு சமீபகாலமாக விடுக்கப்பட்டு வரும் தொடர் மிரட்டல்களில் இதுவும் ஒன்றாகும் என்று பிரெஞ்சு பிரதமர் அலுவலகம் இன்று அறிவித்தது. இந்தச் சூழலை பிரதமர் அலுவலகம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை ஐரோப்பாவில்  குறைந்தது ஏழு விமானங்கள் மற்றும் ஒரு […]

உலகம்

டெல் அவிவிலிருந்து ஆஸ்திரியா சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • October 19, 2026
  • 0 Comments

இஸ்ரேலின் டெல் அவிவிலிருந்து ஆஸ்திரியாவின் வியன்னாவுக்குச் சென்று கொண்டிருந்த ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த விமானம் பல்கேரிய தலைநகர் சோஃபியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானப் பயணத் தரவுகளைக் கண்காணிக்கும் Flightradar24-இன் தகவல்களின்படி, OE-LZE எனப் பதிவுசெய்யப்பட்ட ஏர்பஸ் A320 ரக விமானம், மாலை சுமார் 6.40 மணியளவில் டெல் அவிவிலிருந்து புறப்பட்டு, பின்னர் இரவு சுமார் 9.25 மணியளவில் சோஃபியாவுக்குத் திருப்பிவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது விமானத்தில் ஆறு […]

உலகம்

ஹாலிஃபாக்ஸில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • August 11, 2026
  • 0 Comments

ஹாலிஃபாக்ஸில் (Halifax) உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நோவா ஸ்கோஷியாவில் (Nova Scotia) வைத்து நேற்று குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் அருகில் இருந்த வாகனத்தில் இருந்து வெடிக்கக்கூடிய திரவங்கள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். நபரின் பெயரையோ அல்லது அவரது மிரட்டலுக்கு என்ன காரணம் என்பதையோ புலனாய்வாளர்கள் வெளியிடவில்லை. இதேவேளை கனடாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு இதுவரை இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதுடன், டொரெண்டோவில் […]