ஐரோப்பா

ரோம் நோக்கிச் சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

டப்ளினிலிருந்து ரோம் நோக்கிச் சென்ற ஏர்பஸ் A320 ரக விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த விமானம் பிரான்சின் எவ்ரூ (Evreux) விமான தளத்திற்குத் திருப்பி விடப்பட்டது.

ஐரோப்பாவில் விமானங்களை இலக்காகக் கொண்டு சமீபகாலமாக விடுக்கப்பட்டு வரும் தொடர் மிரட்டல்களில் இதுவும் ஒன்றாகும் என்று பிரெஞ்சு பிரதமர் அலுவலகம் இன்று அறிவித்தது.

இந்தச் சூழலை பிரதமர் அலுவலகம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஐரோப்பாவில்  குறைந்தது ஏழு விமானங்கள் மற்றும் ஒரு சொகுசு கப்பலுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்