உலகம்

டெல் அவிவிலிருந்து ஆஸ்திரியா சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இஸ்ரேலின் டெல் அவிவிலிருந்து ஆஸ்திரியாவின் வியன்னாவுக்குச் சென்று கொண்டிருந்த ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த விமானம் பல்கேரிய தலைநகர் சோஃபியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

விமானப் பயணத் தரவுகளைக் கண்காணிக்கும் Flightradar24-இன் தகவல்களின்படி, OE-LZE எனப் பதிவுசெய்யப்பட்ட ஏர்பஸ் A320 ரக விமானம், மாலை சுமார் 6.40 மணியளவில் டெல் அவிவிலிருந்து புறப்பட்டு, பின்னர் இரவு சுமார் 9.25 மணியளவில் சோஃபியாவுக்குத் திருப்பிவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது விமானத்தில் ஆறு விமானப் பணியாளர்களும் 51 பயணிகளும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சோஃபியா விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் வரை பாதுகாப்பு வழங்குவதற்காக, பல்கேரிய விமானப்படையின் போர் விமானம் ஒன்று விமானத்தின் மீது பறந்ததாகவும் கூறப்படுகிறது.

விமானம் தரையிறங்கிய பிறகு பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர், மேலும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்