குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்தபோது, விசாரணை அதிகாரிகளை மாற்றுமாறு கோரி அவர் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார். இலங்கை செய்தி

உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார் சுரேஷ் சலே

  • July 1, 2026
  • 0 Comments

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தனது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று (01) கைவிட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்தபோது, விசாரணை அதிகாரிகளை மாற்றுமாறு கோரி அவர் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார். உண்ணாவிரதம் காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைல் இதயப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். தனது சட்டத்தரணிகளின் ஆலோசனையைப் பின்பற்றியே அவர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிர்த்த […]

கைது வேட்டை மூலமாகவே இந்த அரசாங்கம் தமது இருப்பை தக்கவைத்துக் கொண்டுவருகின்றது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். அரசியல் இலங்கை செய்தி

ஆட்சியை தக்கவைக்கவே ‘கைது வேட்டை’- கதறுகிறார் விமல்

  • July 1, 2026
  • 0 Comments

கைது வேட்டை மூலமாகவே இந்த அரசாங்கம் தமது இருப்பை தக்கவைத்துக் கொண்டுவருகின்றது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “அரச ஊழியர்கள் தமக்கென ஒரு வாகனம் கொள்வனவு செய்யும் யுகத்தை உருவாக்குவோம் என ஆட்சியாளர்கள் உறுதியளித்தனர். ஆனால் இன்று 20 கிலோ அரிசி கடன் தவணை அடிப்படையில் வழங்கப்படுகின்றது. அரசாங்க ஊழியர்களே, இந்த அரசாங்கத்துக்கு தபால்மூலம் வாக்குகளை அள்ளிவழங்கினர். ஆனால் […]

வியாழக்கிழமை அதிகாலை நேரத்தில், பட்டாயா (Pattaya) நகரின் கடற்கரைச் சாலைப் பகுதியிலிருந்து துன்சனோக் தோன்ஹோம்லா (Tunchanok Donhomla - 17) என்ற சிறுமியை சைமன் கார்மன் அழைத்துச் சென்றதாக பொலிஸார்குற்றம் சாட்டியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

தாய்லாந்தில் 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: சூத்திரதாரி கைது

  • June 27, 2026
  • 0 Comments

தாய்லாந்தில் ‘சூட்கேஸ்’ ஒன்றிற்குள் இருந்து சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆஸ்திரேலிய பிரஜையொருவர் அந்நாட்டு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம், Ballarat பகுதியைச் சேர்ந்த சைமன் கார்மன் (Simon Carman – 45) என்பவரே, பாங்காக் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வெள்ளிக்கிழமை மாலை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வியாழக்கிழமை அதிகாலை நேரத்தில், பட்டாயா (Pattaya) நகரின் கடற்கரைச் சாலைப் பகுதியிலிருந்து துன்சனோக் தோன்ஹோம்லா (Tunchanok Donhomla – […]

அமெரிக்க ராஜாங்கச் செயலர் மார்கோ ரூபியோ Marco Rubio மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஆகியோருக்கிடையிலான சந்திப்பின்போது எடுக்கப்பட்ட படம். உலகம் செய்தி

அமீரகத்தின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா துணை நிற்கும்: Marco Rubio உறுதி

  • June 24, 2026
  • 0 Comments

அமெரிக்க ராஜாங்கச் செயலர் மார்கோ ரூபியோ Marco Rubio , ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை Sheikh Mohamed bin Zayed Al Nahyan நேரில் சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில், ஹார்முஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்வது மற்றும் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவது போன்ற முக்கிய விவகாரங்கள் தொடர்பில் ஆலோசிக்கப்பட்டன. ஈரானின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக அமீரகம் காட்டிய […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவிலும் H5 வகை பறவைக் காய்ச்சல் இனங்காணப்பட்டது

  • June 20, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக H5 வகை பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. அந்நாட்டின் வேளாண்மை அமைச்சர் இன்று இந்த தகவலை உறுதிப்படுத்தினார். கடல் பறவையான ‘பிரவுன் ஸ்குவா’  (brown skua) என்ற பறவையிடம் இந்த நோய் கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அதேநேரம் ‘ஜெயண்ட் பெட்ரல்’ (giant petrel) என்ற பறவையிடமும் தற்போது பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். பறவைகளின் உயிர் வாழ்வுக்கு அச்சுறுத்தலாக உள்ள H5 வகை தொற்று அவுஸ்திரேலியாவில் மட்டுமே கண்டறியப்படாமல் இருந்த நிலையில் தற்போது அங்கும் […]

விளையாட்டு

துருக்கியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி!

  • June 14, 2026
  • 0 Comments

2026 FIFA உலகக்கிண்ண கால்பந்து தொடரில்   குரூப் D பிரிவில் துருக்கு மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிப்பெற்றுள்ளது. இந்த  போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் 27-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவுக்காக நெஸ்டரி இரான்குண்டா (Nestory Irankunda) முதல் கோலை அடித்தார். பின்னர், 75-வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது கோலை அடித்தது. அதன்படி, ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கோல் கணக்கில் போட்டியை வென்றது. இந்த […]

ஆஸ்திரேலியா செய்தி

” புலம்பெயர் இலங்கையர்களின் நம்பிக்கையை சிதைக்கமாட்டோம்”

  • June 1, 2026
  • 0 Comments

  ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், புலம்பெயர் இலங்கையர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். மெல்பேர்னில் வசிக்கும் இலங்கையர்களால் ஸ்பிரிங்வேல் நகர மண்டபத்தில் இதற்குரிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அமைச்சர் இதன்போது கேட்டறிந்து கொண்டார். தற்போதைய அரசாங்கத்தினால் அதற்காக எடுக்கப்பட்டுள்ள முற்போக்கான தீர்மானங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் விளக்கமளித்தார். புதிய அரசாங்கத்தின் மீது புலம்பெயர் இலங்கையர்கள் வைத்துள்ள தளராத நம்பிக்கைக்காக அமைச்சர் நன்றி […]

உலகம்

டிப்தீரியா நோய் பரவலால் திண்டாடும் ஆஸ்திரேலியா! 200இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

  • May 20, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் டிப்தீரியா (diphtheria) நோய் பரவலால் 220 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஆஸ்திரேலியாவின் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளிலும், குயின்ஸிலாந்திலும் அதிகளவிலான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கான தடுப்பூசி விகிதங்களில் ஏற்பட்ட சரிவே இந்த நோய் பரவல் மீள் எழுச்சிக்கு முக்கிய காரணம் என மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பதிவான நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் பழங்குடியினர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால், தடுப்பூசி போடும் முறையை மேம்படுத்துவதற்காக சுகாதார அதிகாரிகள் பழங்குடியின அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகின்றனர். இதேவேளை […]

இலங்கை செய்தி

நீர்த் தடாகத்தில் மூழ்கி 16 வயது சிறுவன் பலி: யாழில் சோகம்!

  • May 18, 2026
  • 0 Comments

யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள நீர்த் தடாகத்தில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பருத்தித்துறை, புலோலி மேற்குப் பகுதியைச் சேர்ந்த திலீபன் சந்தோஷ் (வயது 16) என்ற சிறுவன், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தனது குடும்பத்தினருடன் வல்வெட்டித்துறையில் உள்ள நீர்த் தடாகத்துக்கு நீராடச் சென்றுள்ளார். இதன்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்குச் சென்ற சிறுவன், நீருக்குள் மூழ்கியுள்ளார். உயிரிழந்த சிறுவன் சிறு வயதிலேயே தனது […]

உலகம் செய்தி

தைவானை பாதுகாக்குமா அமெரிக்கா? ட்ரம்பிடம் நேரில் வினா தொடுத்த சீன ஜனாதிபதி!

  • May 15, 2026
  • 0 Comments

சீன ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது, தைவான் விவகாரம் குறித்து தான் எந்தவொரு உறுதிமொழியையும் வழங்கவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீன விஜயத்தை நிறைவு செய்து வாஷிங்டன் திரும்பும் வழியில் விமானத்தில் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தைவானுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அமெரிக்கா அதைப் பாதுகாக்குமா என்று சீன ஜனாதிபதி தன்னிடம் நேரடியாகக் கேட்டதாகவும், அதற்கு “நான் அதைப் பற்றிப் பேச விரும்பவில்லை” என்று பதிலளித்தாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும், […]