உலகம்

டிப்தீரியா நோய் பரவலால் திண்டாடும் ஆஸ்திரேலியா! 200இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

ஆஸ்திரேலியாவில் டிப்தீரியா (diphtheria) நோய் பரவலால் 220 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக ஆஸ்திரேலியாவின் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளிலும், குயின்ஸிலாந்திலும் அதிகளவிலான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

குழந்தைகளுக்கான தடுப்பூசி விகிதங்களில் ஏற்பட்ட சரிவே இந்த நோய் பரவல் மீள் எழுச்சிக்கு முக்கிய காரணம் என மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பதிவான நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் பழங்குடியினர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால், தடுப்பூசி போடும் முறையை மேம்படுத்துவதற்காக சுகாதார அதிகாரிகள் பழங்குடியின அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகின்றனர்.

இதேவேளை நோய் பரவலை கட்டுப்படுத்த கூடுதல் தடுப்பூசிகள் மற்றும் அவசரகாலப் பணியாளர்கள் உள்ளிட்ட அரசாங்க ஆதரவுத் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!