இந்தியா செய்தி

தொடர் போராட்டங்களால் டெல்லி பொருளாதாரத்துக்கு பேரிழப்பு

டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தால் ரூ.2 ஆயிரம் கோடி (இந்திய நாணய மதிப்பு) இழப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தால் ரூ.2 ஆயிரம் கோடி (இந்திய நாணய மதிப்பு) இழப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் உள்ள வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் தலைவர் பிரிஜேஷ் கோயல், காவல் ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

” தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி, டெல்லியில் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கடந்த 10-ஆம் திகதி நடைபெற்ற போராட்டத்தின் போது, பல பகுதிகளில் உள்ள கடைகளை உள்ளூர் அதிகாரிகள் மூடுமாறு தெரிவித்தனர்.

சில இடங்களில் பொலிஸார் மற்றும் நிர்வாகத்தினர் அழுத்தம் கொடுத்தனர். இதனால், பல்வேறு இடங்களில் வர்த்தகம் முற்றிலும் முடங்கியது. இதன் காரணமாக, டெல்லி முழுவதும் சுமார் ரூ.2,000 கோடி வர்த்தக இழப்பு ஏற்பட்டது.

எனவே, போராட்டங்களின்போது கடைகளை மூடுமாறு வர்த்தகர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது. சந்தைகள் தொடர்ந்து செயல்படுவதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

நவராத்திரி மற்றும் ராம்லீலா நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், தீபாவளி பண்டிகையும் நெருங்குகிறது.

இதனால், சந்தைகளில் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். இத்தகைய சூழலில், கடையடைப்பு அல்லது பிற இடையூறுகள் ஏற்பட்டால் விற்பனை பாதிக்கப்படும். எனவே, மீண்டும் இதுபோன்ற இடையூறுகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும். ” – எனவும் மேற்படி கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி