ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் வலுவான நிலநடுக்கம் பதிவு
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் இன்று 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் 15.4 கிலோமீட்டர் (9.5 மைல்கள்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ரஷ்ய அறிவியல் அகாடமியின் (RAS) ஒருங்கிணைந்த புவி இயற்பியல் சேவை தகவல் தெரிவித்துள்ளது.
மேற்படி நிலநடுக்கத்தின் அதிர்வானது துறைமுக நகரத்திலும் உணரப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,
இதற்கிடையே கம்சட்கா கடற்கரைக்கு அப்பால் 06:51 UTC மணிக்கு 5.6 ரிக்டர் அளவிலான நில அதிர்வு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த வலுவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது,
உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் இல்லை.




