ஐரோப்பா

ஸ்டாமரின் பாதுகாப்பு திட்டம் : நிதி பற்றாக்குறை தொடர்பில் கெமி பேடனோக் கடும் விமர்சனம்

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் அண்மையில் முன்வைத்த பாதுகாப்பு திட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கெமி பேடனோக் (Kemi Badenoch) கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

ஸ்டாமர் முன்வைத்த பாதுகாப்பு யோசனையில் £4.7 பில்லியன் நிதிப் பற்றாக்குறை இருப்பதாகவும், அதை அவரது வாரிசுதான் சரிசெய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டாமர் முன்வைத்த பாதுகாப்புச் செலவில் £15 பில்லியன் உயர்வை அறிவித்தார்.

இது பெரும்பாலும் மற்ற துறைகளில் செய்யப்பட்ட செலவுக் குறைப்புகளால் நிதியளிக்கப்பட்டது. ஆனால், இந்த உயர்வில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இதற்கிடையே அடுத்து பிரதமராக வரக்கூடிய தெரிவில் முன்னணி வகிக்கும் ஆண்டி பர்ன்ஹாம், இந்த நிதிப் பற்றாக்குறையைச் சரிசெய்ய, அதிக வரிகள் விதிப்பது, அதிக கடன் வாங்குவது அல்லது மேலும் செலவுக் குறைப்புகளைச் செய்வது ஆகிய உத்திகளை கையாள வேண்டியிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்