தளபதி விஜய்க்கு இலங்கை நாடாளுமன்றில் வாழ்த்து!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வரலாற்று வெற்றியை பதிவுசெய்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு, இலங்கை நாடாளுமன்றத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே, இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவரான இரா. சாணக்கியன் எம்.பி. இவ்வாறு வாழ்த்து தெரிவித்தார்.
” தமிழக சட்டமன்றத் தேர்தலில் வரலாற்று சாதனை படைத்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய்க்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
தமிழ்நாடு அரசோடும், தமிழக மக்களோடும் ஈழத் தமிழர் பிரச்சினை சம்பந்தமாக வேலை செய்வதற்கு நாம் காத்திருக்கின்றோம்.” எனவும் சாணக்கியன் எம்.பி. குறிப்பிட்டார்.





