ஹோர்முஸ் நீரிணையில் உச்சக்கட்ட மோதல் : ஈரானின் 07 அதிவேகப் படகுகள் மீது தாக்குதல்!
ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் 07 அதிவேகப் படகுகளை அமெரிக்கப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஈரானின் 7 அதிவேகப் படகுகளை நாங்கள் அழித்துவிட்டோம்.
மனிதாபிமான அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த மீட்பு நடவடிக்கைக்கு யாராவது தடையோ அல்லது இடையூறோ விளைவித்தால் அவர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தப்படும்,” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளையில், ஈரானின் தாக்குதலால் ஐக்கிய அரபு அமீரகத்தின் புஜைரா எண்ணெய் துறைமுகத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீரகத்தின் மீது 12 பொலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் அமெரிக்காவின் தாக்குதல் குறித்த தகவல்களை ஈரான் மறுத்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி, “அரசியல் நெருக்கடிக்கு இராணுவ ரீதியான தீர்வு கிடையாது. அமெரிக்காவின் சுதந்திர திட்டம் என்பது ஒரு முட்டுக்கட்டை ,” என குற்றம் சாட்டியுள்ளார்.





