செய்தி தமிழ்நாடு

அதிமுக எம்எல்ஏக்கள் மூவர் ராஜினாமா -தவெகவில் இணைந்ததால் பரபரப்பு

  • May 25, 2026
  • 0 Comments

தமிழகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் மூவர் தங்களது பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகிய மூவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர் சபாநாயகர் பிரபாகரை சந்தித்து 03 எம்எல்ஏக்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை வழங்கியுள்ளனர் பின்னர் மூவரும் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதிமுக ஏற்கெனவே இரண்டு அணிகளாக பிரிந்துள்ள நிலையில், வேலுமணி […]

இந்தியா

த.வெ.க ஆட்சி நீடிக்காது : குழந்தைகள் அம்மாவை தேடுவதுபோல ஓடிவருவார்கள் – ஸ்டாலின்!

  • May 24, 2026
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி 02 நாளைக்குக் கூட நீடிக்காது என முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், அவர்களுக்கு விழுந்தது சினிமா கவர்ச்சிக்கு விழுந்த வாக்குகளே தவிர, அரசியல் எழுச்சிக்கானது அல்ல. இந்த சினிமா கவர்ச்சி ரொம்ப நாளைக்கு நீடிக்காது. இரண்டு ஆண்டுகள் கூட இந்த அரசு நீடிக்காது. குழந்தைகள் அம்மாவை தேடுவது போல மக்கள் கொஞ்ச […]

அரசியல் இலங்கை செய்தி

தளபதி விஜய்க்கு இலங்கை நாடாளுமன்றில் வாழ்த்து!

  • May 5, 2026
  • 0 Comments

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வரலாற்று வெற்றியை பதிவுசெய்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு, இலங்கை நாடாளுமன்றத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே, இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவரான இரா. சாணக்கியன் எம்.பி. இவ்வாறு வாழ்த்து தெரிவித்தார். ” தமிழக சட்டமன்றத் தேர்தலில் வரலாற்று சாதனை படைத்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய்க்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன். தமிழ்நாடு அரசோடும், தமிழக மக்களோடும் ஈழத் தமிழர் பிரச்சினை சம்பந்தமாக வேலை செய்வதற்கு […]

இந்தியா

விஜய் வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிப்பு

  • May 4, 2026
  • 0 Comments

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்ப கட்டத்திலிருந்தே முன்னிலை வகித்து வருகிறது. சென்னை நீலாங்கரை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள விஜய் இல்லத்தின் முன்பு குவிந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அப்பகுதியில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், விஜய் இல்லத்திற்குச் செல்லும் வீதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, வாகன போக்குவரத்து முறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக பொலிஸாருடன் இராணுவத்தினர் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியா செய்தி தமிழ்நாடு

த.வெ.க. தொண்டர்கள் கொண்டாட்டம்! சொந்த தொகுதியில் ஸ்டாலின் திண்டாட்டம்!!

  • May 4, 2026
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகம் மற்றும் விஜய்யின் வீட்டுக்கு முன்னால் ஆதரவாளர்கள் திரண்டு, வெற்றிக் கோஷம் எழுப்பிவருகின்றனர். தமிழக சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய நிலைவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 107 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. அக்கட்சி தனித்து ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை பலத்தைபெறும் என கட்சி தொண்டர்கள் உறுதியாக நம்புகின்றனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. 65 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. அக்கட்சி பெரும் பின்னடைவைச் சந்திக்கவில்லை. எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகிக்கின்றார். தமிழக சட்டப்பேரவைத் […]

இந்தியா

தமிழக சட்டமன்ற தேர்தல்: விஜய் முன்னிலை!

  • May 4, 2026
  • 0 Comments

தமிழக சட்டமன்றத் வாக்கெண்ணும் பணிகள் இன்று (4) மும்முரமாக இடம்பெற்று வருகின்றது. தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்களிப்பு கடந்த 23-ம் திகதி நடைபெற்ற நிலையில் இன்று காலை முதல் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி அதிக தொகுதிகளில் விஜய் தலைமையிலான தவெக முன்னிலைப் பெற்றுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தில் போட்டியிட்ட […]

இந்தியா

இது வெறும் தொடக்கம் மட்டுமே: விஜய் அதிரடி பதிவு

  • April 24, 2026
  • 0 Comments

தமிழக தேர்தலில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சற்று முன்னர் அவர் தன் முகநூல் பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும், வணக்கம். அரசியல் என்பது ஏதோ அசகாய சூரர்களுக்கானது மட்டுமே. அதீத அனுபவசாலிகளுக்கானது மட்டுமே. பதவிகளை அனுபவிப்பவர்களுக்கானது மட்டுமே. இப்படி அரசியலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் வைத்தவர்களின் மாயாஜாலக் கணக்குகள், சாதாரண வெகுஜன மக்களால் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன. அரசியலைக் […]

செய்தி தமிழ்நாடு

சொத்து மதிப்பை குறைத்து காட்டிய விஜய் – முறைகேடானது என உயர்நீதிமன்றம் அறிவிப்பு

  • April 20, 2026
  • 0 Comments

சட்டசபைத் தேர்தலுக்காக இரண்டு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த த.வெ.க. தலைவர் விஜய், ஒரு தொகுதியில் 100 கோடி ரூபா சொத்து மதிப்பை குறைத்து காட்டியமை முறைகேடானது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேர்தலில் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இரு தொகுதிகளிலும் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் முரணான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாகவும், பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்துக்கணக்கை மறைத்துள்ளதாகவும் கூறி, வியாசர்பாடியைச் சேர்ந்த […]

பொழுதுபோக்கு

பரப்புரை காரில் மணமக்கள்! விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி

  • April 20, 2026
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது காரில் மணமக்களை நேரில் அழைத்து வாழ்த்திய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அப்போது, அந்த வழியாக வந்த மணமக்கள் இருவரைத் தனது பரப்புரை வாகனத்திற்குள்ளேயே அழைத்து வாழ்த்தியுள்ளார். வழக்கமாகத் தலைவர்கள் தங்களது வாகனத்தின் மேலிருந்தே வாழ்த்துத் தெரிவிக்கும் நிலையில், பாதுகாப்பு வளையங்களையும் கடந்து திருமணப்பரிசாக மணமக்களை அருகில் அழைத்து விஜய் உரையாடியது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. […]