ஐரோப்பா

பிளேக் நோய் பீதி – ரஷ்யாவின் விளக்கம்கோரும் WHO

சைபீரியாவில் உள்ள பிளேக் (plague) நோய் குறித்த ஆய்வு நிறுவன ஊழியர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அங்கு  தொற்றுநோய் பரவும் அபாயம் ஏதுமில்லை என்று ரஷ்யாவின் சுகாதாரக் கண்காணிப்பு அமைப்பு நேற்று அறிவித்துள்ளது.

இருப்பினும் அந்தப் பெண் உயிரிழந்ததற்கான காரணம் குறித்த கூடுதல் தகவல்களை வழங்குமாறு உலக சுகாதார அமைப்பு ரஷ்யாவை வலியுறுத்தியது.

28 வயதான அந்த ஆய்வக ஊழியர், இதுவரை கண்டறியப்படாத காரணத்தால் ஏற்பட்ட நிமோனியா (நுரையீரல் அழற்சி) பாதிப்பால் உயிரிழந்ததாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்டோரிடையே சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் சுமார் 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இருப்பினும் இந்த சூழல் தொடர்பில் ரஷ்ய அதிகாரிகள் விரிவான விவரங்களை வெளியிடவில்லை.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்