இந்தியா செய்தி

தலைமை தேர்தல் ஆணையாளர் பதவி விலகும்வரை போராட்டம் தொடரும்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி வில​கும் வரை போராட்டம் ஓயாது என்று எதிர்க்கட்சித் தலை​வர் ராகுல் காந்தி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி வில​கும் வரை போராட்டம் ஓயாது என்று எதிர்க்கட்சித் தலை​வர் ராகுல் காந்தி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

எஸ்.ஐ.ஆர் (SIR) விவகாரம் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி ‘இண்டியா’ கூட்டணி தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த சில நாட்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தப்பட்டதுடன், எஸ்.ஐ.ஆர் பணிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் இல்லத்தில் கூட்டணி தலைவர்கள் நேற்று மாலை கூடி ஆலோசித்தனர்.

ஆலோசனைக்குப் பிறகு, கூட்டணித் தலைவர்கள் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட ராகுல் காந்தி,

“மக்களின் அடிப்படை உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது. அதைத் தடுத்து ஜனநாயகத்தைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைந்து போராடுகிறோம். இது பலமுனைப் போராட்டம் அல்ல, ஒற்றைப் போராட்டம். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி ஒருமித்த கருத்துடன் களமிறங்கியுள்ளோம். எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை இந்தப் போராட்டம் ஓயாது” என்று தெரிவித்தார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி