தமிழக, ஆந்திர முதல்வர்கள் சந்திப்பு
கிருஷ்ணா-காவிரி மற்றும் கோதாவரி நதி நீர் இணைப்புத் திட்டம் குறித்து, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் விஜயவாடாவில் சுமார் ஒன்றரை மணி நேரம் பேச்சு நடத்தினார்.
ஒரு நாள் பயணமாக ஆந்திரா சென்ற முதல்வர் விஜய்யுடன் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த் ஆகியோர் சென்றிருந்தனர்.
விஜயவாடா விமான நிலையத்தில் அவரை அமைச்சர் நாராயணா வரவேற்றார். தொடர்ந்து, கனக துர்க்கையம்மனை தரிசித்த முதல்வர் விஜய், சந்திரபாபு நாயுடுவின் இல்லத்திற்குச் சென்று ஆலோசனை மேற்கொண்டார்.
நதி நீர் இணைப்பின் மூலம் ஆந்திரா மட்டுமின்றி அனைத்து தென் மாநிலங்களும் வளம் பெறும் என்றும், மத்திய அரசின் உதவியுடன் இணைந்து இத்திட்டத்தை நிறைவேற்றுவோம் என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
தெலுங்கு கங்கை கால்வாய் மூலம் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவை (இந்த ஆண்டு இதுவரை 4.08 டிஎம்சி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது) அதிகரிக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் கோரிக்கை விடுத்தார்.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இருவரும் விஜயவாடா பவுர்ணமி படித்துறை பகுதியில் நடைபெற்ற ‘விஜயவாடா உத்சவ்-2.0’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அங்கு திரண்டிருந்த பொதுமக்களையும் ரசிகர்களையும் பார்த்து முதல்வர் விஜய் உற்சாகமாகக் கையசைத்தார்.




