ஐரோப்பா

04 ஆண்டுகால மோதலை முடிவுக்கு கொண்டுவர போப் லியோ அழைப்பு

உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் வருவதாக குறிப்பிட்ட பாாப்பரசர் போப் லியோ மோதலை முடிவுக்கு கொண்டுவர அழைப்பு விடுத்துள்ளார்.

இன்றைய ஆராதணையின்போது அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “துயரமான சம்பவங்கள் பெருகி வருகின்றன, இதனால் குழந்தைகள் உட்பட பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது,” என்று கூறினார்.

சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மதிக்கப்பட வேண்டும் என்றும், இரு தரப்பிலும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின்படி, கிட்டத்தட்ட நானரை ஆண்டுகால சண்டையில் 16,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பான்மையானவர்கள் உக்ரேனியர்களாவர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்