போலந்து கிராகோவ் துப்பாக்கிச்சூடு – நோர்வே படுகொலையாளியை ஆய்வு செய்த தாக்குதல்தாரி
போலந்தின் கிராகோவ் நகரில் 06 பேரை படுகொலை செய்த தாக்குதல்தாரி, நோர்வேயில் பல படுகொலைகளைச் செய்த ஆண்டர்ஸ் பெஹ்ரிங் பிரைவிக் Anders Behring Breivik தொடர்பான இணையதளங்களைப் பார்வையிட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போலந்து நீதித்துறை அமைச்சர் இன்று இந்த தகவலை வெளியிட்டார்.
அவர் தீவிர வலதுசாரி சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டிருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம் தாக்குதல்தாரியின் அறையில் ‘கேட்ஸ்டன் கொடி’ (Gadsden flag) கண்டெடுக்கப்பட்டதாகவும், அதில் ஒரு பாம்பின் உருவமும் “என்னை மிதிக்காதே” (Don’t tread on me) என்ற வாசகமும் இருந்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
(இத்தகைய கொடிகள் அமெரிக்காவில் தீவிர வலதுசாரி குழுக்களால் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும், ஒக்சின்ஸ்கி பணிபுரிந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட குறியீடுகளும் “இந்த விசாரணைப் பாதையை உறுதிப்படுத்தும் வகையில் இருக்கலாம்” என்று அவர் கூறினார்.
2011 ஜூலையில், முஸ்லிம் எதிர்ப்பு மற்றும் நவ-நாஜி கொள்கை கொண்ட பிரைவிக், ஓஸ்லோவில் கார் குண்டுவெடிப்பு மூலம் எட்டு பேரைக் கொன்றார்.
அதனைத் தொடர்ந்து, உட்டோயா தீவில் இருந்த தொழிலாளர் கட்சியின் இளைஞர் முகாமில் துப்பாக்கிச் சூடு நடத்தி, பெரும்பாலும் பதின்ம வயதினர் உட்பட 69 பேரை படுகொலை செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




