ஐரோப்பா செய்தி

செஞ்சிலுவைச் சங்க’ தொடர்பாளர் என கூறியது தவறு – பசுமைக் கட்சித் தலைவர்

பிரிட்டிஷ் செஞ்சிலுவைச் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் என தன்னை விபரித்தது “தவறான வார்த்தைப் பயன்பாடு”  என பசுமைக் கட்சித் தலைவர் Zack Polanski ஒப்புக்கொண்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டு துணைத் தலைவராக போட்டியிடும் போது நிதி திரட்டிய நிகழ்ச்சிகளில், அவர் British Red Cross அமைப்பின்  செய்தித் தொடர்பாளர் என கூறியதாக ‘தி டைம்ஸ்’ செய்தி வெளியிட்டது. ஆனால் அந்த தொண்டு நிறுவனம் இந்தக் கூற்றை மறுத்தது.

இதுகுறித்து BBC யின் ‘Today’ நிகழ்ச்சிக்கு கருத்து தெரிவித்த Polanski தாம் அந்த அமைப்புக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சிகளை நடத்தியதாகவும்,  அதன் பணிகளைப் பற்றி மேடையில் பேசியதாகவும் விளக்கமளித்தார்.

“நான் தவறான சொல்லைப் பயன்படுத்தினேன், அதை ஏற்றுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.

மேலும், அந்த அமைப்பு எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்காது என்பதை ஒப்புக்கொண்ட அவர், சம்பந்தப்பட்ட குறிப்பை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!