ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தின் கவுன்சில் தேர்தல் முடிவுகள் முக்கிய இடம் பெறும் – நிபுணரின் விளக்கம்

ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் இரவு நேர வாக்கு எண்ணிக்கை இடம்பெறாத காரணத்தினால், எதிர்வரும் 08 ஆம் திகதி  காலை வெளியாகும் செய்திகளில் இங்கிலாந்தின் கவுன்சில் தேர்தல் முடிவுகள் முக்கிய இடம் பெறும் என தேர்தல் ஆய்வாளர் மைக்கேல் த்ராஷர் ( Michael Thrasher) தெரிவித்துள்ளார்.

2025 மே மாத கவுண்டி கவுன்சில் தேர்தல்களை முன்னிட்டு, முக்கிய கட்சிகளான தொழிற்கட்சி மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சி பெரும் இட இழப்புகளை சந்திக்கக்கூடும் என்ற நிலை நீடிக்கிறது.

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் , இந்த இரு கட்சிகளுக்கும் ஆதரவு குறைந்து வருவதை கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.

சமீபத்திய இடைத்தேர்தல்களிலும் தொழிலாளர் கட்சி பெரும்பாலான இடங்களை இழந்துள்ளது. கன்சர்வேடிவ் கட்சியும் அதைவிடச் சிறப்பாக செயல்படவில்லை.

இந்த நிலையில், தொழிலாளர் கட்சியே அதிக அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளது. கட்சிக்குள் நிலவும் உட்கட்சிப் பிரச்சினைகள்,

இந்தத் தேர்தல்களை Keir Starmer தலைமையின் எதிர்காலத்துடன் இணைத்துள்ளது.

இட இழப்புகளை கட்டுப்படுத்த முடிந்தால் அவர் தனது நிலையைத் தக்கவைத்துக்கொள்ளலாம். ஆனால், மோசமான கணிப்புகள் உண்மையானால், சுமார் 2,000 இடங்கள் வரை இழப்புகள் ஏற்பட்டால், நீண்டகாலமாக தொழிலாளர் கட்சி கட்டுப்பாட்டில் இருந்த மன்றங்களும் இழக்கப்படலாம்.

அப்படி ஏற்பட்டால், கட்சிக்குள் கடும் அதிருப்தி உருவாகும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!