ஐரோப்பா செய்தி

பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட இளைஞர்கள் – முன்னாள் கவுன்சில் தலைவருக்கு 18 மாத சிறை

பாலியல் ரீதியாக ஐந்து இளைஞர்களை துன்புறுத்திய குற்றச்சாட்டில், ஸ்காட்லாந்தின் SNP கட்சியின் முன்னாள் கவுன்சில் தலைவர் ஜோர்டான் லிண்டனுக்கு (Jordan Linden) 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு குற்றச்சாட்டுகள் வெளிவந்ததைத் தொடர்ந்து பதவியிலிருந்து விலகிய அவர்,

ஏழு நாட்கள் நடைபெற்ற விசாரணைக்கு பிறகு மார்ச் மாதத்தில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.

30 வயதான லிண்டன், 14 வயதுடைய சிறுவன் உட்பட பல பதின்ம வயதினருக்கு விரும்பத்தகாத பாலியல் தகவல்கள் அனுப்பியதிலும் குற்றவாளி  என நிரூபிக்கப்பட்டார்.

இதில் அவர் குளிக்கும் புகைப்படங்கள் மற்றும் அத்துமீறிய தனிப்பட்ட படங்களும் இடம்பெற்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவங்கள் 2011 முதல் 2021 வரை நீண்ட 10 ஆண்டுகள் காலத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

ஃபால்கிர்க் ஷெரிஃப் நீதிமன்றம் தண்டனை வழங்கியபோது, லிண்டனை பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டிலும் சேர்க்க உத்தரவிட்டது.

குற்றங்களின் தன்மையை கருத்தில் கொண்டு சிறைத்தண்டனை தவிர வேறு வழியில்லை என நீதிபதி தெரிவித்தார்.

சில குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டிருந்தாலும், முக்கிய குற்றங்களில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் போது, குற்றச்சாட்டுகளை லிண்டன் மறுத்து, அவை நடைபெறவில்லை அல்லது பரஸ்பர  சம்மதத்துடன் நடந்தவை என தெரிவித்தார்.

அவரது பாதுகாப்பு தரப்பு, இளமையில் அவர் எதிர்கொண்ட சமூக தனிமை மற்றும் அனுபவங்கள் அவரது நடத்தைக்கு காரணமாக இருந்திருக்கலாம் என வாதிட்டது. இருப்பினும், அவரது நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை அவர் தற்போது உணர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டது.

தண்டனை அறிவிக்கப்பட்டபோது அவர் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தவில்லை. பின்னர் காவலர்களால் நீதிமன்றத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த வழக்கு, அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!